‘7 ஓட்டு வித்தியாசத்தில் தோல்வி’!.. ‘அதிர்ச்சியில் மயங்கி விழுந்த அதிமுக வேட்பாளர்’.. பரபரப்பு சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்ததால் அதிமுக வேட்பாளர் மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு மாவட்டம் பவானி ஊராட்சி ஒன்றியம் 3-வது வார்டு பகுதியில் அதிமுக சார்பில் ராமலிங்கம் என்பவர் போட்டியிட்டார். இவரை எதிர்த்து 7 பேர் போட்டியிட்டனர். இந்த நிலையில் இவர்களுக்கான வாக்கு எண்ணிக்கை பவானி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
அதில் ராமலிங்கம் 1352 வாக்குகளும், சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமார் 1359 வாக்குகளும் பெற்றனர். 7 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்ததால் திடீரென ராமலிங்கம் மயங்கி விழுந்துள்ளார். அப்போது அருகில் இருந்த சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமார், அவரை வெளியே தூக்கி சென்றுள்ளார். பின்னர் பள்ளி வளாகத்தில் இருந்த செவிலியரை முதலுதவி அளிக்க அழைத்துள்ளார். செவிலியர் மேற்கொண்ட முதலுதவி சிகிச்சையை அடுத்து ராமலிங்கம் கண் விழுத்தார். பின்னர் 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மனிதாபிமானத்துடன் செயல்பட்ட சுயேட்சை வேட்பாளர் சதீஷ்குமாரை அப்பகுதி மக்கள் பாராட்டினர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘உள்ளாட்சி தேர்தலில் சுயேட்சையாக போட்டி’!.. '21 வயதில் பஞ்சாயத்து தலைவர்'.. திரும்பி பார்க்க வைத்த கல்லூரி மாணவி..!
- ‘ஓட்டு இப்படியாயா போடுவீங்க?’.. வாக்குச் சாவடி அதிகாரிகளை ’தெறிக்கவிட்ட’.. ‘வேற லெவல்’ வாக்காளர்கள்!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ‘தமிழகம்’ முழுவதும்... நாளை முதல் ‘கல்லூரிகளுக்கு’ தொடர் ‘விடுமுறை’.. உயர்கல்வித்துறை அறிவிப்பு...
- 'முன்னாள் முதல்வர் ஜெயலலிதா'... ‘3-ம் ஆண்டு நினைவு தினம்'... ‘ஒரு சிறு பார்வை’!
- ‘ரஜினி, கமல் அரசியல் பிரவேசம்’... ‘மக்களுக்கு தெரியும்’... ‘எம்எல்ஏ ரோஜா அதிரடி பதில்’!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- ரேஷன் அட்டைதாரர்களுக்கு ‘பொங்கல் பரிசு’!.. ‘ஆனா இவங்களுக்கு மட்டும்தான்’.. முதல்வர் அதிரடி அறிவிப்பு..!
- இன்றைய முக்கியச் செய்திகள்... ஓரிரு வரிகளில்... ஒரு நிமிட வாசிப்பில்!
- நாளை மாலை 5 மணிக்குள் ‘நம்பிக்கை வாக்கெடுப்பு’!.. ‘மறைமுக தேர்தல் கூடாது’.. வெளியான அதிரடி தீர்ப்பு..!