வெற்றி பெற்றதும் திமுகவில் இணைந்த அதிமுக வேட்பாளர்.. அதிர்ச்சியில் அதிமுகவினர்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்வெற்றி பெற்ற சில மணி நேரத்திலேயே அதிமுக வேட்பாளர் திமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தமில்லாமல் தமிழகத்தில் முதல் வெற்றியை பதிவு செய்த ஓவைசி கட்சி.. எங்கு தெரியுமா..?
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த 19-ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (22.02.2022) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. இதில் பல இடங்களில் ஆளும் கட்சியான திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன.
அந்த வகையில் புதிதாக உருவாகியுள்ள ஆவடி மாநகராட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. அதில் ஆவடி மாநகராட்சிக்குட்பட்ட 14-வது வார்டில் அதிமுக சார்பில் மருத்துவர் ராஜேஷ் போட்டியிட்டார். வாக்குகள் எண்ணப்பட்டத்தில் ராஜேஷ் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ரவிச்சந்திரனை விட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.
இதனை அடுத்து வெற்றி பெற்ற சில மணி நேரத்திலேயே திமுகவின் கரைவேட்டியை கட்டிக்கொண்ட அதிமுக வேட்பாளர் ராஜேஷ், திமுக பால்வளத்துறை அமைச்சர் நாசரை சந்தித்து அக்கட்சியில் இணைந்தார். இது அதிமுகவினர் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து அவரது காரில் கட்டப்பட்டிருந்த அதிமுக கொடியை அகற்றிவிட்டு திமுக கொடியை ராஜேஷின் ஆதரவாளர்கள் மாட்டினர்.
அதேபோல் மதுரை மேலூர் நகராட்சி 9-வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அருண்சுந்தர பிரபு வெற்றி பெற்றார். இதனை அடுத்து திமுக வணிகவரி மற்றும் பத்திரப் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் அருண்சுந்தர பிரபு திமுகவில் இணைந்தார். இப்படி வெற்றி பெற்ற அதிமுக வேட்பாளர் அடுத்தடுத்து திமுகவில் இணைந்தது அதிமுக கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்: கன்னியாகுமரியில் வெற்றி பெற்ற மாற்றுத் திறனாளி வேட்பாளர்.. !
- தேர்தல் முடிவுகள் : 22 வயசு தான்.. ஜெயிச்சு தமிழகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை பெண் .. யாருப்பா இவங்க?
- திமுக, அதிமுக இடையே கடும் வாக்குவாதம்.. கள்ளக்குறிச்சியில் ஒட்டு எண்ணிக்கையை தற்காலிகமாக நிறுத்திய அதிகாரிகள்..!
- எஸ்பி வேலுமணியின் சொந்த தொகுதியை கைப்பற்றிய திமுக - செந்தில் பாலாஜியின் ஆப்பரேஷன் சக்ஸஸ்..!
- தேர்தல் முடிவுகள் : முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வசிக்கும் வார்டை கைப்பற்றிய திமுக
- ஒரே வாக்கில் மாறிய முடிவு.. பாஜக வேட்பாளர் அசத்தல் வெற்றி
- பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்
- தேர்தல் முடிவுகள் : ஆரம்பம் முதலே அதிரடி காட்டும் திமுக.. எந்தெந்த இடங்களில் வெற்றி..!
- Breaking: நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்.. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
- அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது.. திமுக நிர்வாகி தாக்கப்பட்ட வழக்கில் போலீசார் நடவடிக்கை..!