'இது வேற லெவல்’.. பார்க்கில் சந்தித்துக்கொண்ட எதிர்க்கட்சி வேப்டாளர்கள்.. வாக்கு சேகரித்த ருசிகரம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மதுரை ஈக்கோ பார்க்கில் வாக்கிங் சென்ற இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் எதார்த்தமாக சந்தித்துக்கொண்டபோது வாக்கு சேகரித்துக்கொண்ட ருசிகரமான சம்பவம் நடந்துள்ளது.

அதிமுகவைச் சேர்ந்த கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரையில் வசிப்பதால், அங்கு அடிக்கடி தங்கிவிடுவார். அப்படி தங்கும் நாட்களில் எல்லாம் மதுரை ஈக்கோ பார்க்கில் அதிகாலை வாக்கிங் செல்வது வழக்கம். அப்படி வாக்கிங் சென்றபோது ஒரு முறை மு.க.ஸ்டாலினையே சந்தித்துள்ளார்.

அப்படித்தான் தற்போது திமுகவின் கூட்டணி வேட்பாளராக சிபிஎம் சார்பில் போட்டியிடும் மதுரை வேட்பாளரும் எழுத்தாளருமான சு.வெங்கடேசனை சந்தித்துள்ளார்.  முன்னதாக சு.வெங்கடேசனுக்கு கதை, கவிதை எழுத வரும். ஆனால் அரசியல் வராது. தேர்தல் முடிவதற்குள் வாபஸ் வாங்கிவிட்டு ஓடிவிடுவார். சிபிஎம் கட்சி சார்பில் போட்டியிட யாரும் முன்வராததால், வம்படியாக வெங்கடேசன் நிறுத்தப்பட்டுள்ளதாக செல்லூர் ராஜூ விமர்சித்திருந்தார்.

இந்நிலையில் சு.வெங்கடேசனை தற்செயலாக சந்தித்த செல்லூர் ராஜூ, ‘எனக்கே ஓட்டு போடுங்க சார். உங்கள் ஆதரவு எனக்கு வேண்டும்’ என்று கேட்டுள்ளார். அப்போது பதிலுக்கு, சு.வெங்கடேசன், ‘கண்டிப்பாக.. போட்டுடுவோம்’ என்று சொல்லி கைகுலுக்கிவிட்டு, தன் கட்சிக்காரர்களுடன் தன் வாக்கிங்கை தொடர்ந்தார்.

இரண்டு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் வாக்கு சேகரித்துக்கொண்ட, சுவாரஸ்யமான சம்பவத்தை கூடியிருந்தவர்கள் ஆச்சரியமாக பார்த்தனர். எழுத்தாளர் சு. வெங்கடேசன் சாகித்ய அகாதமி விருதுபெற்ற காவல் கோட்டம் என்கிற நாவலை எழுதியவர். பின்னாளில் இந்த நாவலின் சாரம்தான் அரவான் என்கிற பெயரில் திரைப்படமானது. இதேபோல் விகடன் இதழில், வேள்பாரி வேந்தன் என்கிற சரித்த தொடர் நாவலையும் சு.வெங்கடேசன் எழுதினார் என்பது குறிப்பிடத்தக்கது.

LOKSABHAELECTIONS2019, ELECTIONS, AIADMK, DMK, SELLURRAJU, SUVENKATESAN, CPM

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்