கிஷோர் கே சுவாமி மீது 'பிரபல' நடிகை புகார்...! 'என்னையும் மறைந்த என் 'கணவரை' பத்தியும்...' - சோசியல் மீடியால அவதூறாக 'போஸ்ட்' போட்ருக்கார்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழகத்தின் முன்னாள் முதல்வர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகிய மூன்று பேரைக் குறித்தும் அவதூறாகப் பதிவிட்ட கிஷோர் கே சுவாமி சமீபத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

கிஷோர் கே சுவாமி மீது 'பிரபல' நடிகை புகார்...! 'என்னையும் மறைந்த என் 'கணவரை' பத்தியும்...' - சோசியல் மீடியால அவதூறாக 'போஸ்ட்' போட்ருக்கார்...!

திராவிட முன்னேற்ற கழகத்தின் காஞ்சிபுரம் வடக்கு மாவட்ட தகவல் தொழில் நுட்ப ஒருங்கிணைப்பாளர் ரவிசந்திரன் பம்மல் அவர்கள் சங்கர் நகர் போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கிஷோர் கே சுவாமி மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

மேலும், பெண் பத்திரிக்கையாளர் குறித்து சமூக வலைதளத்தில் இழிபடுத்தி பதிவிட்ட வழக்கில் கிஷோர் கே சுவாமி மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

Actress Rohini lodged a complaint against Kishore K Swamy

இந்த நிலையில் கிஷோர் கே சுவாமி மீது பிரபல நடிகை ரோகிணி இணையதளம் மூலம் காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். அதில் தன்னைப் பற்றியும், மறைந்த தன் கணவர் ரகுவரனை பற்றியும் சமூக வலைத்தளத்தில் அவதூறான கருத்தை பதிவு செய்ததாக கூறி புகார் அளித்துள்ளார்.

ஏற்கனவே முன்னாள் முதல்வர்கள், பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய விவகாரத்தில் ஏற்கனவே கிஷோர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் மூன்றாவது புகார் அளிக்கப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்