நிக்கி கல்ராணி வீட்டில் காணாமல் போன கேமரா, ஆடைகள்.. சிசிடிவி காட்சியில் தெரிய வந்த உண்மை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: தமிழ் திரைப்பட நடிகையான நிக்கி கல்ராணி தன் வீட்டில் வேலை செய்யும் ஒருவர் திருட்டில் ஈடுபட்டதாக போலீசில் புகார் அளித்துள்ளார்.

Advertising
>
Advertising

பெங்களூரை பூர்விகமாக கொண்ட நிக்கி கல்ராணி தமிழ் மற்றும் மலையாள திரை உலகில் நடித்து வருகிறார். தமிழில் டார்லிங் என்ற படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிய அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள தனியார் சொகுசு குடியிருப்பில் வசித்து வருகிறார்.

வீட்டு வேலை பார்க்க பணியாளர்:

இந்நிலையில் நடிகை நிக்கி கல்ராணி, கடந்த 11-ஆம் தேதி அண்ணாசாலை காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார். அதில் தன்னுடைய ராயப்பேட்டை தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டில் வேலை பார்ப்பதற்காக தனியார் ஏஜென்சி மூலம் தனுஷ் என்பவரை நியமித்ததாக தெரிவித்துள்ளார்.

ஆடைகள் கேமரா திருட்டு:

கடலூர் மாவட்டம் விருதாச்சலம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான தனுஷ் தனது வீட்டிலிருந்து சில பொருட்களை திருடி சென்றுவிட்டார் என அந்த புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக அவர் தனது ஆடைகள் மற்றும் தான் பயன்படுத்தி வந்த கேமரா ஆகியவற்றை திருடி சென்றுவிட்டதாகவும் புகாரில் தெரிவித்திருந்தார்.

சிசிடிவி காட்சிகள் ஆய்வு:

இந்நிலையில், அண்ணாசாலை போலீசார் நிக்கிகல்ராணி வீட்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் தனுஷ் பொருட்களைத் திருடிச் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.

போலீசாருக்கு கிடைத்த தகவல்:

அதோடு விசாரணையில் தனுஷ் திருப்பூரில் உள்ள அவரது நண்வர் வீட்டில் பதுங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், திருப்பூரில் மறைந்திருந்த தனுஷை போலீசார் பிடித்து விசாரணை செய்ததில் விலை உயர்ந்த கேமராவை நடிகை நிக்கி கல்ராணி வீட்டிலிருந்து திருடியதாகவும் தன்னுடைய குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார் தனுஷ்.

திருடிய கேமராவை கோயம்புத்தூரில் ஒரு கடையில் அதனை விற்பனை செய்துவிட்டு திருப்பூரில் உள்ள நண்பர் வீட்டில் தங்கி இருந்ததாகவும் கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து கேமரா மற்றும் நடிகை நிக்கி கல்ராணியின் ஆடைகளை பறிமுதல் செய்த போலீசார் பிடிபட்ட தனுஷை சென்னை அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

NIKKI KALRANI, CLOTHES, நிக்கி கல்ராணி, திருட்டு, ஆடைகள்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்