‘என்ன கட்டிக்கலன்னா சூசைட் பண்ணிப்பேன்...’ ‘நியூஸ் பேப்பர்ல வேற ஒரு பொண்ணுக்கூட...’ தொரத்தி தொரத்தி லவ் டார்ச்சர் செய்த பெண்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்நடிகையின் வீட்டில் பணிபுரியும் பெண் ஒருவர், தன்னை காதலிக்க கட்டாயப்படுத்துவதாக ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.
முந்தைய காலகட்டத்திலிருந்து இன்று வரை பெரும்பாலும் ஆண்களே பெண்களை துரத்தி துரத்தி காதலிப்பதும், காதலித்த பெண் கிடைக்கவில்லை என்றால் அவர்களை தொல்லை செய்வதும், சோக கீதங்களை இசைப்பதுமாக இருப்பார்கள், ஒரு சில விதி விலக்குகளை தவிர. இந்த நிலையில் தற்போது நடந்திருக்கும் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அது போல ஒரு பிரபல சீரியலில் நடிக்கும் ஒரு நடிகையின் வீட்டில் பணிபுரியும் ஒரு பெண், சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கார்த்திக்கை காதலித்துள்ளார். கார்த்திக் பிரபல நடிகையின் வீட்டில் கடந்த சில மாதங்களுக்கு முன் தான் ஓட்டுநர் வேலைக்கு சேர்ந்துள்ளார். இவர் அந்த நடிகைக்கு துரத்து உறவினரும் கூட.
கார்த்திக் மீது காதல் கொண்ட அந்த பெண் எந்த தயக்கமும் இன்றி தன்னுடைய காதலை முதலில் அவரிடம் தெரிவித்துள்ளார். கார்த்திக்கு இந்த காதலில் விருப்பம் இல்லை என்பதால் தனக்கு வீட்டில் பெண் பார்க்கிறார்கள் என்று கூறி மழுப்பியுள்ளார். ஆனால் அந்த பெண் விடாப்பிடியாக தன்னை தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்தி உள்ளார்.
இந்த விஷயத்தை அறிந்த நடிகை கார்த்திக்கை ஓட்டுநர் பணியிலிருந்து நீக்கியுள்ளார். கார்த்திக்கிற்கும் இது நல்லது தான் இனி எந்த வித பிரச்சனையும் இல்லை என்றே நினைத்துக் கொண்டிருந்தார்.
காதலிப்பதை நிறுத்தாத அந்த பெண் இடைவிடாமல் கார்த்திக்கை செல்போனில் அழைத்து தொந்தரவு செய்துள்ளார். தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டியுள்ளார்.
மேலும் செய்தித்தாளில் பெண் ஒருவருடன் தன்னை தொடர்பு படுத்தி வெளியான செய்தியைப் பார்த்து, அதிர்ந்து போயிருக்கிறார் கார்த்திக். இதனால், தனக்கு ஏதாவது பிரச்சினை ஏற்பட்டு விடுமோ என்று நினைத்தது உடனடியாக மாநகர காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வந்து நடந்த அனைத்தையும் கூறி புகார் பதிவு செய்துள்ளார். புகாரை பெற்றுக்கொண்ட போலீசார் இரு தரப்பினரையும் விசாரித்து வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- நம்ம ‘லவ்’ மேட்டர அப்பா, அம்மாகிட்ட சொல்லிட்டு வரேன்...! ‘ஸ்டாப் ப்ளீஸ்.., இந்த கல்யாணம் நடக்கவே நடக்காது...’ காதலிக்கு அதிர்ச்சி கொடுத்த ப்ளேபாய்...!
- ‘காதல் விவகாரத்தில்’... ‘நண்பனுக்கு உதவப்போய்’... ‘ஊர்மக்களால் இளைஞருக்கு நேர்ந்த பயங்கரம்’!
- ‘இது பர்ஸ்ட் கொலை இல்ல...’ ‘என் மகன் அந்த பொண்ண கர்ப்பமாக்கிட்டான், அதனால தான்...’ அதிர வைக்கும் உச்சக்கட்ட கொடூரம்...!
- ‘ஃபேஸ்புக்கில்’ அறிமுகம்... ‘காதல்’ திருமணம் செய்து ‘ஐந்தே’ மாதங்களில்... ‘சென்னையில்’ நடந்த சோகம்...
- 'கடவுளே...! நீ இருந்தும் என்ன பிரயோஜனம்...?' 'ஒரு பெரிய கம்பை எடுத்து...' காதல் பிரச்சனையால் கடவுளை தாக்கிய வாலிபர்...!
- ‘நேர்ல பாத்ததும் பின்வாங்கிருவான்னு நெனச்சேன்’.. ‘திட்டிக்கூட பாத்தேன்’.. ‘ஆனா..!’ நெட்டிசன்களை உருகவைத்த ‘காதல்கதை’!
- ‘காரில்’ ஏற்றியதைப் பார்த்து ‘அதிர்ச்சியடைந்த’ உறவினர்கள்... வழிமறித்து ‘அடித்து’ உடைத்ததால் ‘பரபரப்பு’... ‘காதல்’ கணவர் செய்த ‘கொடூரம்’...
- VIDEO: ‘வீல்சேர்’தான் வாழ்க்கை.. ‘இது செட் ஆகாது’ கடைசிவரை உறுதியாக இருந்த இளம்பெண்.. மெய்சிலிர்க்கவைத்த காதல் கல்யாணம்..!
- ‘விட்டுக் கொடுக்காததால் ஒரே நேரத்தில் 2 காதலிகளுக்கும் தாலி கட்டிய இளைஞர்’.. ‘சிங்கிள்ஸ்களை சோதிக்கும் வீடியோ!’
- 'ப்ளீஸ் நாம மேரேஜ் பண்ணிக்கலாம்டா...' 'ஒழுங்கா அபார்சன் பண்ணிடு, இல்லன்னா...' புள்ளிங்கோ செய்த மிரட்டல் சம்பவம்...!