Divya Sridhar Arnav Issue : "சீரியல் நடிகையின் குற்றச்சாட்டு".. கைதானாரா நடிகர் அர்ணவ்.? பரபரப்பு தகவல்.
முகப்பு > செய்திகள் > தமிழகம்பிரபல சீரியல் நடிகர் அர்ணவ் தன்னை மதம் மாற்றி திருமணம் செய்துகொண்டதாவும், அவர் வேறொரு நடிகையுடன் தொடர்பில் இருப்பதுடன், தன்னிடம் இருந்து விலகி செல்வதாகவும், தன்னுடனான எந்த திருமண ஆதாரத்தையும் வெளியிட கூடாது என வலியுறுத்தி வந்ததாகவும், பெற்றோரிடம் சம்மதம் வாங்காததால் தன்னை விவாகரத்து செய்துவிடவும் தயாராக இருப்பதாகவும் அண்மையில் பிரபல சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் குற்றம் சாட்டியிருந்தார்.
மேலும், தான் கர்ப்பிணியாக இருப்பதை சோசியல் மீடியாவில் அறிவித்ததால் தன்னை அர்ணவ் தொடர்ந்து டார்ச்சர் செய்து வந்ததாகவும், தன்னை எட்டி உதைத்து, தன் கரு கலையும் அளவுக்கு சென்றுவிட்டதாகவும், கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் இருக்கும் தன்னை வந்து தன் கணவர் பார்க்க கூட இல்லை என்றும், குற்றம் சாட்டிய திவ்யா ஸ்ரீதர், திருமண புகைப்படங்கள், போன் கால் ரெக்கார்டிங்ஸ் உள்ளிட்ட ஆதாரங்களுடன் காவல் துறையினரிடம் புகார் அளித்ததாக ஊடகங்களிடம் தெரிவித்திருந்தார்.
இதேபோல் இந்த குறித்து ஊடகங்களிடம் பேசிய அர்ணவ், “நான் திவ்யா ஸ்ரீதரை அடித்ததாக சொல்லப்படும் வீட்டில் நான் அந்த நேரத்தில் இல்லை. அதுசம்மந்தப்பட்ட சிசிடிவி ஆதாரம் என்னிடம் உள்ளது. இது வழக்கமான குடும்ப பிரச்சனைதான். நான் நடிப்பு துறையில் இருப்பதால், அவர் பொசசிவாக இப்படி நடந்துகொள்கிறார். அதற்கு அவரது நண்பர்களின் ஆலோசனையும் காரணம். நான் அவரை அடிக்கவில்லை. அவர்தான் சொல்ல போனால் என்னை அடித்தார்.
ஆனால் கரு கலைந்துவிட்டதாக மருத்துவமனையில் இருந்து அவர் கூறுவது, கருவை கலைப்பதற்கான சதியாக நான் கருதுகிறேன்., முறையான மருத்துவ ரிப்போர்ட் வரவேண்டும். எனக்கு என் குழந்தை வேண்டும். அவர் என் மீது வைக்கும் குற்றச்சாட்டுகளும் ஆதார்ப்பூர்வமற்றவை, அவருடைய வக்கீலிடமும் நான் இதையே கூறியிருக்கிறேன். சம்மந்தப்பட்ட ஆதாரங்களுடன் காவல்துறையினரிடம் பேசி வருகிறேன்” என்று தெரிவித்திருந்தார்.
இதனிடையே இதுகுறித்து விசாரித்து வந்த காவல்துறையினர், சீரியல் நடிகர் அர்ணவை கைது செய்து தங்கள் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவந்துள்ளதாகவும் தொடர்ந்து அவரிடம் இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் சென்னை மாங்காடு போலீஸார் நம்மிடையே தகவல் பகிர்ந்துள்ளனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்