படப்பிடிப்பு தளத்தில் பதற்றம்... செல்போனில் வாக்குவாதம்... இறுதி நிமிடங்களில் என்ன நடந்தது?... ஆர்டிஓ விசாரணை ஆரம்பம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சின்னத்திரை நடிகை சித்ரா மரணம் தொடர்பாக நாளை முதல் ஆர்.டி.ஓ விசாரணை தொடங்க உள்ளது. இதற்கிடையே காவல்துறையினரின் விசாரணையும் தொடர்கிறது.

சின்னத்திரை நடிகர் சித்ரா கடந்த 9ஆம் தேதி ஹோட்டல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அவரது கணவர் ஹேம்நாத்திடம் 5வது நாளாக நசரத்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளனர்.

இதனிடையே சம்பவம் நடந்த அன்று படப்பிடிப்புத் தளத்தில் இருந்து வந்த சித்ரா, செல்போனில் நீண்டநேரம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

தாய் மற்றும் ஹேம்நாத்திடம் இருந்து வந்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஹேம்நாத் அவரது தந்தை, சித்ரா கடைசியாக படப்பிடிப்பில் கலந்து கொண்ட சீரியல் படப்பிடிப்பின் இயக்குனர், தயாரிப்பாளர், ஹோட்டல் ஊழியர்கள் ஆகியோரிடம் போலீசார் விசாரணையை முடித்துள்ளனர்.

சித்ரா உடலை மீட்டபோது அங்கு வந்த ஆம்புலன்ஸ் ஊழியர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர். இந்த வழக்கில் நாளை ஆர்டிஓ விசாரணை தொடங்கப்பட உள்ளது.

மேலும், சித்ரா மற்றும் ஹேம்நாத் பெற்றோரிடம் வரதட்சணை தொடர்பான பிரச்சினைகள் ஏதேனும் இருந்ததா என்பதையும் ஆர்டிஓ விசாரணை செய்ய உள்ளார்.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்