எஃப்.ஐ.ஆர்-ல வேற மாதிரி இருக்கு... முன்னுக்கு பின் முரண்பட்ட தகவல்கள்!.. சித்ரா மரணத்தில் எது உண்மை?.. விசாரணையில் அம்பலம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் முதல் தகவல் அறிக்கை வெளியாகி உள்ள நிலையில் அதில் குறிப்பிடப்பட்டுள்ள முரண்பட்ட தகவல்களால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டையில் உள்ள தனியார் ஹோட்டலில் சின்னத்திரை நடிகை சித்ராவின் பூத உடல் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்டது. அவரது பிரேத பரிசோதனை அறிக்கையில், தற்கொலை செய்து கொண்டது தான் அவரது மரணத்திற்கு காரணம் என முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிலையில், சித்ராவின் கணவர் ஹேம்நாத் மற்றும் ஹோட்டல் ஊழியர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை செய்துவரும் நிலையில், சித்ராவின் தந்தை காமராஜ் அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முதல் தகவல் அறிக்கையில் முரண்பட்ட தகவல் வெளியாகியுள்ளது.

அந்த புகாரில் தனது மகள் சித்ராவிற்கும் ஹேம்நாத்துக்கும் பிப்ரவரி மாதம் பத்தாம் தேதி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. மகளுக்கு 50 பவுன், ஹேம்நாத்துக்கு 20 பவுன் நகை போடுவதாக இருந்தது. சம்பவத்தன்று இரவு தனது மனைவியிடம் சித்ரா பேசியதாகவும் அதன் பிறகு அதிகாலையில் தனது சம்பந்தி ரவிச்சந்திரன் தனக்கு போன் செய்தபோது தான் தூங்கியதால் எடுக்கவில்லை.

அதன்பிறகு பேசியபோது ஓட்டலில் சித்ரா தூக்கு போட்டு இறந்துவிட்டதாகவும், ஷூட்டிங் முடித்துவிட்டு வந்தவர் காரில் உள்ள கவரை எடுத்து வருமாறு ஹேம்நாத்திடம் கூறியதாகவும் வெளியே வந்து கவரை எடுத்து விட்டு வந்தபோது கதவை சாத்திக் கொண்டார் நடிகை சித்ரா.

பின்னர், கதவை திறந்து பார்த்தபோது சித்ரா இறந்து போனதாக அந்த முதல் தகவல் அறிக்கையில் பதிவாகி உள்ளது. முதலில் குளித்துவிட்டு உடை மாற்ற வேண்டும் எனக்கூறி தன்னை வெளியே செல்லுமாறு சித்ரா கூறியதாக ஹேம்நாத் போலீசாரிடம் கூறி வந்த நிலையில் சித்ராவின் தந்தை அளித்த புகாரில் பதியப்பட்டுள்ள முரண்பட்ட தகவலால் போலீசார் குழப்பம் அடைந்துள்ளனர்.

சித்ராவின் மரணம் தற்கொலைதான் என மருத்துவர்கள் தெரிவித்தாலும் போலீஸ் நிலையத்தில் இருந்து இன்னும் ஹேம்நாத் அனுப்பாமல் போலீசார் தங்களது விசாரணை வளையத்திற்கு உள்ளேயே வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்