Bhuvaneswari : “சில அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா துறையினர் காரணம்..!” .. நடிகை புவனேஸ்வரி பரபரப்பு பேட்டி.!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

90களில் பிரபலமான சீரியல் நடிகையாக இருந்தவர் நடிகை புவனேஸ்வரி. இவர் பிஹைண்ட்வுட்ஸ் youtube தளத்துக்கு பிரத்யேக பேட்டி அளித்திருக்கிறார்.

Bhuvaneswari : “சில அதிகாரிகள், அரசியல்வாதிகள், சினிமா துறையினர் காரணம்..!” .. நடிகை புவனேஸ்வரி பரபரப்பு பேட்டி.!
Advertising
>
Advertising

இதில், புவனேஸ்வரி தம்முடைய திரைவாழ்க்கை கடந்து வந்த பாதை குறித்த பல்வேறு விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அதில், “எனக்கு சினிமாவில் வரும் ஆர்வமும் ஆவலும் இல்லாமல் இருந்தது. ஆனால் என் அம்மாதான் சொன்னார், நம் குடும்பத்தில் யாரும் சினிமாவில் நடித்ததில்லை. நீ நடிக்கலாமே என்றார். சரி. சீரியல்தானே.. என்று அம்மாவின் வலியுறுத்தலால் நடிக்க போனேன்.

அதன் பிறகு சீரியல்களில் நடிக்கத் தொடங்கினேன். எனக்கு நடிக்கவும் தெரியாது. ஆனால் 2, 3 சீரியல்களில் வாய்ப்பு வந்தது. பின்னர் நான் நடித்த முதல் படமே ஷங்கர் சாரின் பாய்ஸ் படம். எனக்கு கிடைத்த முதல் திரைப்படமே பாய்ஸ் தான். அதுவும் பெரிய திரைப்படம், பெரிய அறிமுகம். இரண்டு மூன்று சீரியல்கள் நடித்திருந்த எனக்கு சங்கர் சார் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. பெரிய விஷயமாக இருந்தது அவரை பார்க்கும் போதே பிரம்மாண்டமாக இருந்தது.” என பகிர்ந்தார். மேலும் அதன் பிறகு தனக்கு நிறைய தெலுங்கு படங்களில் வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறினார்.

Actress Bhuvaneswari Opens about Cases she faced Interview

அதே சமயம்,  தான் சீரியலில் சந்தித்த பிரச்சனைகள் குறித்து பேசும்போது, “நான் சீரியலில் நுழைந்தபோது எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் கஷ்டப்படாமலே சீரியலுக்குள் நுழைஞ்சேன். சீரியலில் நடிக்க தொடங்கிய உடனே அடுத்தடுத்த சீரியல்கள் புக் ஆனது. சினிமாவிற்குள் வரும்போது பலரும் கஷ்டப்பட்டதாக சொல்வார்கள். நான் அப்படி வரவில்லை. ஆனால் சீரியலுக்குள் வந்த பிறகு தான் பெண்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் எல்லாம் இருக்கிறது என்பதை பார்த்தேன். நானும் நிறைய பிரச்சனைகளை சந்தித்தேன்.” என கூறினார்.

குறிப்பாக தான் எதிர்கொண்ட பிரச்சனைகள், வழக்குகள் குறித்து  நடிகை புவனேஸ்வரி பேசும்போது,  “நான் பொதுவாக யாரை பற்றியும் தப்பா பேச மாட்டேன்.. அது என் இயல்பு. யாரையும் தப்பா பேச எந்த உரிமையும் கிடையாது என நான் நம்புகிறேன். அப்படி நினைக்கக்கூடிய கேரக்டர்தான் என்னுடையது.

ஆனால் நான் சிலரை தவறாக பேசியதாக அளிக்கப்பட்ட புகார்தான் மிகவும் கஷ்டமாக இருந்தது. நாம பேசாததை, சொல்லாததை சொன்னதாக சொல்கிறார்களே என்பதுதான் அது... அந்த சமயம் கமிஷனர்,  நான் எழுத்துப்பூர்வமாகவும் யாரை குறித்தும் எதுவும் சொல்லவில்லை என்றும் எந்த ஒரு வாய்ஸ் ரெக்கார்டு வழியிலும் நான் எதுவும் சொல்லவில்லை என்றும் உறுதி செய்திருந்தார். ஆனால் பலரும் உறுதுணையாக இருந்தார்கள். பாய்ஸ் திரைப்படத்தில் நடித்த கேரக்டர் கூட அனைவருக்கும் பிடித்துதான் இருந்தது, சில பேருக்கு என் வளர்ச்சி பிடிக்காததாக இருந்தது. 

என்னை சுற்றி உருவான சர்ச்சைகளுக்கு சில அதிகாரிகள், சில அரசியல்வாதிகள், சில சினிமாத்துறையினர் காரணமாக இருந்தனர். ” என்று பேசினார்.

BHUVANESWARI, ACTRESS BHUVANESWARI, BHUVANESWARI INTERVIEW

மற்ற செய்திகள்