‘பிகில்’ இசை விழாவிற்கு... ‘தளபதி’ போட்ட ‘ஆர்டர்’... 'தல' ரசிகர்கள் செய்த காரியம்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

பிகில் இசை வெளியீட்டு விழாவின்போது, ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க வேண்டாம் என, நடிகர் விஜய்  வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை பள்ளிக்கரணையில், அரசியல் கட்சி சார்ந்த திருமண வரவேற்பு பேனர் விழுந்து, கடந்த இருநாட்களுக்கு முன்னர், சுபஸ்ரீ என்ற இளம்பெண் விபத்துக்குள்ளாகி உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.  இதைத் தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு அரசியல் தலைவர்களும், பிரபலங்களும் தங்கள் கட்சியினருக்கும், தொண்டர்களுக்கும், இனி வரவேற்பு பேனர்கள் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் விஜய்யும், தனது ரசிகர் மன்றங்களுக்கு ஒரு அறிவிப்பு ஒன்றை கொடுத்துள்ளார். அதில், ‘பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழாவின் போது, ரசிகர்கள் யாரும் பேனர் வைக்க கூடாது. பேனர்கள் வைக்கப்படவில்லை என்பதை, அந்தந்த மாவட்ட பொறுப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும்’ எனவும் கூறியுள்ளார்.

இதனிடையே, நடிகர் அஜித்குமார் நடிக்கும் படங்களுக்கு, இனி பேனர் வைக்க மாட்டோம் என, மதுரையைச் சேர்ந்த அஜித் ரசிகர்கள் உறுதிமொழி எடுத்து, போஸ்டர் ஒட்டியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போஸ்டரில், ‘சுபஸ்ரீயின் மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது. தவறுகள் நடப்பதற்கு முன்னாள், அதை நாம் சிந்தித்துச் செயல்படத் தவறுவதால் தான், ஒரு இழப்பு நமக்கு அறிவுறுத்துகிறது. இனிமேலாவது சிந்தித்துச் செயல்படுவோம். அந்த சகோதரியின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கின்றோம்’ என கூறப்பட்டுள்ளது.

இதேபோல், காப்பான் திரைப்படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி, சென்னை வடபழனியில் உள்ள நட்சத்திர விடுதியில் நடைப்பெற்றது. நிகழ்ச்சியில் பேசிய நடிகர் சூர்யா, சென்னையில் பேனர் விழுந்து நடைப்பெற்ற விபத்தில் இளம்பெண் உயிரிழந்தது வருத்தமளிக்கிறது என்றார். பேனர் மற்றும் கட் ஆவுட்களை யாரும் வைக்க வேண்டாம் என ரசிகர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

VIJAY, AJITHKUMAR, FANS, BANNER

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்