"எங்க வீட்டுல எம்மதமும் சம்மதம் தான்.. காலைல இதை கண்டிப்பா செஞ்சிடுவேன்".. ஷோபா Exclusive..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் விஜய்யின் தாயாரும், இயக்குனர் SA சந்திரசேகர் அவர்களின் மனைவியுமான ஷோபா நம்முடைய சேனலுக்கு பிரத்யேக நேர்காணல் ஒன்றை அளித்திருக்கிறார். அதில் தன்னுடைய வாழ்க்கை குறித்து பல தகவல்களை அவர் பகிர்ந்துகொண்டார்.

Advertising
>
Advertising

ஷோபா

இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகர், நடிகர் விஜய் நடிப்பில் பல படங்களை இயக்கினார். அவற்றுள் பல படங்களின் தயாரிப்பாளராக ஷோபா பணியாற்றினார். ஷோபா தமிழ் திரையுலகில் பல கிளாசிக் ஹிட் பாடல்களையும் பாடியுள்ளார். இந்நிலையில், தன்னுடைய கலையுலக வாழ்வு மற்றும் தனது குடும்பம் பற்றி பல்வேறு தகவல்களை ஷோபா பகிர்ந்திருக்கிறார்.

Images are subject to © copyright to their respective owners.

தினசரி வாழ்க்கை

இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன், தினசரி வாழ்க்கை முறைகளை பற்றி சொல்லும்படி ஷோபாவிடம் கேட்க, அப்போது இதற்கு பதில் அளித்த ஷோபா,"காலைல 6.30 க்கு எந்திரிச்சிடுவேன். எப்போதும் காலைல ஃபில்டர் காபி வேணும். அதுக்கு அப்புறம் 108 தடவை ராகவேந்திராய நமஹ எழுதுவேன். கடந்த 10 வருஷமா எழுதிட்டு இருக்கேன். அதுக்கு அப்புறம் பைபிள் வசனங்களை படிச்சிட்டு அதை எழுதுவேன். எங்க வீட்டு பூஜை அறையில எல்லா சாமி படங்களும் இருக்கு. எங்க வீட்டை பொறுத்தவரையில் எம்மதமும் சம்மதம் தான். சில கீர்த்தனைகள் பாடுவேன். வாரத்துல இரண்டு நாட்கள்  கிளாஸ்க்கு போறேன். அங்க கத்துக்குறதை பிராக்டீஸ் பண்ணுவேன்" என்றார்.

முன்னதாக வெளியான நேர்காணல் வீடியோவில் தனது பெற்றோர் இந்து - முஸ்லீம் மதங்களை சேர்ந்தவர்கள் என்றும் தனது கணவர் சந்திரசேகர் கத்தோலிக்க கிறிஸ்துவர் என்றும் ஷோபா தெரிவித்திருந்தார். திருமணத்திற்கு பிறகு மதம் மாறியதாக குறிப்பிட்டிருந்த ஷோபா, தன்னுடைய மன விருப்பத்திற்கு ஏற்றபடி கடவுள் வழிபாட்டை மேற்கொண்டு வருவதாக தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது. 

20 வருட பயணம்

தன்னுடைய பாட்டு கிளாஸ் குறித்து பேசிய அவர்,"பிருந்தா தியாகராஜன் தான் எனக்கு குரு. 20 வருஷமா போயிட்டு இருக்கேன். அதை விட்டுட்டா என்னால பாட முடியாது. இதுவரைக்கும் 9 சிடி ரிலீஸ் பண்ணிருக்கேன். அதுக்கு எல்லாம் பிராக்டீஸ் இருந்தா தான் முடியும்" என்றார்.

தொடர்ந்து தன்னுடைய உணவு பழக்க வழக்கங்கள் குறித்து பேசிய அவர்,"காலையில அவகோடா பழம் மட்டும் தான் சாப்பிடுவேன். பூஜை எல்லாம் முடிச்சிட்டு வர மதியம் ஆகிடும். வந்த உடனே, லஞ்ச்-க்கு டைம் ஆகிடும். கேரளா அரிசியில ஏதாவது செஞ்சு கொடுப்பாங்க. அது மட்டும் தான் சாப்பிடுவேன்" என்றார்.

 

SHOBHA CHANDRASEKAR, VIJAY

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்