DJ Black-ஐ கலாய்த்த TR.. விழுந்து விழுந்து சிரித்த பூஜா.. அந்த கவுண்டர் தான் அல்டிமேட்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் எக்கச்சக்க ரியாலிட்டி ஷோக்களுக்கு பிரத்யேகமான ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
பிக்பாஸ், குக் வித் கோமாளி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளை ஒவ்வொரு நாளும் தவறாமல் பார்க்கும் ஏராளமான மக்களும் உள்ளனர். அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியும் பெரிய அளவில் பிரபலமான ஒரு ஷோ ஆகும். இதுவரை சூப்பர் சிங்கர் ஜூனியர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிகளின் பல்வேறு சீசன்கள் முடிந்துள்ள சூழலில், தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சூப்பர் சிங்கர் உள்ளிட்ட விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளின் மூலம் டிஜே பிளாக் என்பவர் மக்கள் மத்தியில் மிகப் பிரபலம். எந்த நிகழ்ச்சி சென்றாலும் நடுவே டிஜே பிளாக் ஒளிபரப்பும் வசனங்களோ, பாடல்களோ பெரிய அளவில் அனைவரையும் கவரக்கூடிய வகையில் தான் இருக்கும்.
அந்த வகையில் சூப்பர் சிங்கரில் போட்டியாளராக களம் இறங்கி உள்ள பூஜாவிற்கு பல ரொமான்டிக் பாடல்கள், பல ரொமான்டிக் வசனங்களை அவ்வப்போது தட்டி விடுவதில் வழக்கமாகக் கொண்டுள்ளவர் டிஜே பிளாக். இதனால் இந்த நிகழ்ச்சியில் அரங்கேறும் கலகலப்பான விஷயங்களும் மக்கள் மத்தியில் அதிகம் வைரலாகும். அந்த வகையில் தற்போது STR ரவுண்ட் நடைபெற்றிருக்கிறது. இதில் சிறப்பு விருந்தினராக டி.ராஜேந்தர் கலந்துகொண்டார்.
வழக்கம்போல பூஜா பாட வரும்போது 'என் மனசில் நீயே தானா?' என டி.ஆர் படத்தின் பாடலையே DJ பிளாக் ஒலிக்க விடுகிறார். இதுபற்றி தொகுப்பாளர் பிரியங்கா பேச, அப்போது டி.ஆர்,"பொண்ணுக்கிட்ட காதலை சொன்னா தான் காதல்னு இல்லம்மா. ஒரு பெண்ணுக்காக நின்னாவே காதல் தான்" என்கிறார். அப்போது, பிரியங்கா DJ பிளாக் பற்றி அவரிடம் சொல்கிறார். அந்த நேரம் பார்த்து விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் வரும் 'உலகத்தில் எவ்வளவோ பொண்ணு இருந்தும்' என்ற வசனத்தில் ஜெஸ்ஸிக்கு பதிலாக பூஜா என்ற வார்த்தையை சேர்த்து ஒலிக்க விடுகிறார் DJ. இதனை கேட்ட டிஆர்,"ஏன்யா என்னை டூப்ளிகேட் காதலுக்குள்ள மாட்டி விடுறிங்க" என கலகலப்புடன் சொல்கிறார். இவற்றை புன்னைகையுடன் பார்த்தபடி நிற்கிறார் பூஜா.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- போன வாரம் வெச்சு செஞ்ச பூஜா குடும்பம்.. திரும்ப மேடை வந்ததும் டிஜே பிளாக் செஞ்ச சம்பவம்.. "மனுஷன் நொந்து போய்ட்டாரு போல!!"
- ஃபீல் செய்த பூஜா குடும்பத்தினர்.. மன்னிப்பு கேட்ட டிஜே பிளாக்!!... கடைசில தான் Prank -ன்னு தெரிய வந்திருக்கு!!
- "ஏன் பூஜாவுக்கு மட்டும்.?".. DJ பிளாக் பாட்டு போடுவது குறித்து மேடையிலேயே வருத்தப்பட்ட குடும்பத்தினர்.? | super singer 9