"கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்"!.. நடிகர் சூர்யா எமோஷனல் பதிவு!.. பொதுமக்களுக்கு அவர் சொன்ன முக்கிய கருத்து!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

" 'கொரோனா' பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்" என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

"கொரோனா தொற்று ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன்"!.. நடிகர் சூர்யா எமோஷனல் பதிவு!.. பொதுமக்களுக்கு அவர் சொன்ன முக்கிய கருத்து!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருகிறது. ஆனால், முழுமையாக மறையவில்லை. இதற்கிடையே பெரும்பாலான மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பிவிட்டனர்.

இந்த நிலையில், தனது ட்விட்டர் பக்கத்தில், "கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று நலமுடன் இருக்கிறேன். வாழ்க்கை இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை என்பதை அனைவரும் உணர்வோம். அச்சத்துடன் முடங்கிவிட முடியாது. அதேநேரம் பாதுகாப்பும், கவனமும் அவசியம். அர்ப்பணிப்புடன் துணைநிற்கும் மருத்துவர்களுக்கு அன்பும், நன்றிகளும்" என்று சூர்யா பதிவிட்டுள்ளார்.

நடிகர் சூர்யாவின் இந்த கருத்து, நாம் அனைவரும் முழுமையாக பெருந்தொற்று அபாயத்தில் இருந்து மீளவில்லை என்பதை உணர்த்துகிறது.

 

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்