"நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர வேண்டும்!"... சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம்!.. என்ன நடந்தது?
முகப்பு > செய்திகள் > தமிழகம்உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றம் நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதி உள்ளார்.
நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் ஒரே நாளில் மூன்று மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர். இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக நடிகர் சூர்யா வெளியிட்டுள்ள அறிக்கையில், "கொரோனா அச்சத்தால் உயிருக்கு பயந்து வீடியோ கான்பிரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வு எழுத வேண்டும் என்று உத்தரவிடுகிறது" என்ற வரிகள் இடம்பெற்றிருந்தன.
இந்நிலையில், "உயிருக்கு பயப்படும் நீதிமன்றம், மாணவர்களை தேர்வெழுத சொல்வதாக சூர்யாவின் கருத்து நீதிபதிகள் மற்றும் சென்னை உயர் நீதிமன்றத்தின் நேர்மையையும், சிரத்தையையும் அவமதிக்கும் வகையில் உள்ளது.
சூர்யாவின் கருத்து, மாண்பை குறைத்து மதிப்பிடுவது மட்டுமல்லாமல், தவறாக விமர்சிக்கும் வகையிலும் உள்ளது!" என்று நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், "நீதித்துறை மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கைக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் வகையிலும் உள்ளது.
சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுத்து இந்திய நீதித்துறையின் மேன்மையை உறுதிப்படுத்த வேண்டும்" என்றும் தனது கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- திருமணமாகி 4 மாதம்! ..'தாலி, பூ, மெட்டியை கழற்றி கணவனிடம் கொடுத்துவிட்டு'.. நீட் தேர்வறைக்குள் நுழைந்த புதுமணப்பெண்!
- "NEET EXAM கொடுக்குற ப்ரஷர் தாங்காம மேலும் ஒரு மாணவி!.. ரொம்ப கஷ்டமா இருக்கு!" - ட்விட்டரில் கனிமொழி கோரிக்கை!
- 'நான் டாக்டர் ஆவேன், மனசு பூரா இருந்த கனவு'... 'திடீரென மொத்த குடும்பத்தையும் புரட்டிப்போட்ட துயரம்'... கோவையில் நடந்த சோகத்தின் உச்சம்!
- 'தமிழக அரசால் சீல் வைக்கப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை'... சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!
- 'மருத்துவ படிப்பிற்கான NEET நுழைவு தேர்வில்...' தமிழக அமைச்சரவை 'அதிரடி முடிவு!’ - திடீர் 'அறிவிப்பிற்கு’ அனைத்து தரப்பினரும் பாராட்டு...!
- "இந்த அரசு இத பின்பற்றல... அதன் விளைவுதான் இந்த இரட்டைக்கொலை!"... தோண்டி எடுத்த மக்கள் நீதி மய்யம்! பரபரப்பை கிளப்பிய அறிக்கை!
- 'ஆமா, எனக்கு விவாகரத்து ஆனது உண்மை தான்'... 'அது 'பிரபா'க்கு தெரியும்'... 'அவளை மிரட்டி தான் சொல்ல வச்சு இருக்காங்க' ... பதறும் இளைஞர்!
- “சாதிமறுப்பு திருமணம்... உடுமலை சங்கர் கொலை வழக்கு”.. சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு!
- ‘ஆன்லைனில்’ மதுபானம் விற்க கோரி மனு.. சென்னை உயர்நீதிமன்றம் ‘அதிரடி’ உத்தரவு..!
- ஒரு கையில் ‘கபசுர குடிநீர்’.. மறு கையில் ‘மதுபாட்டிலா?’ தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி..!