‘இரும்புக்கரம் கொண்டு அடக்கி இருக்கணும்’... ‘ஒடுக்க முடியாவிட்டால்’... ‘பதவியை ராஜினாமா செய்யுங்கள்’... ‘சென்னையில் ரஜினிகாந்த் பரபரப்பு பேட்டி’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

டெல்லியில் நடைபெற்ற கலவரத்தில் 20-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தநிலையில், இதுகுறித்து நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற வன்முறை சம்பவம் தொடர்பாக நடிகர் ரஜினிகாந்த் போயஸ் கார்டனில் உள்ள அவரத வீட்டு முன்பு செய்தியாளர்களிடம் கூறியதாவது: 'சிஏஏ சட்டத்தால் இஸ்லாமியர்கள் பாதிக்கப்பட்டால் முதல் ஆளாக நிற்பேன். உளவுத்துறையின் தோல்வி தான் டெல்லி வன்முறைக்கு காரணம். மத்திய அரசின் உளவுத்துறை சரியாக செயல்படவில்லை. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.

டெல்லி வன்முறையை மத்திய அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கி இருக்க வேண்டும். அமெரிக்க அதிபர் டிரம்ப் வந்த சமயத்தில் கலவரத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்துறை அமைச்சகம் தவறியுள்ளது. இது உளவுத்துறையின் தோல்வி, உள்துறையின் தோல்வி. போராட்டம் வன்முறையாக மாறக்கூடாது. அமைதியாக நடைபெறலாம். டெல்லி போராட்டத்தை மத்திய அரசு ஒடுக்கவில்லை என்றால் எதிர்காலத்தில் பிரச்சனை ஏற்படும்.

டெல்லி கலவரத்தை மத்திய அரசு அடக்க வேண்டும். அடக்க முடியாவிட்டால் பதவியை விட்டு விலக வேண்டியதுதான். குடியுரிமை திருத்தச் சட்டம் திரும்பப் பெறப்படும் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. என்ன போராடினாலும் மத்திய அரசு இந்த சட்டத்தை திரும்பப் பெறாது என நினைக்கிறேன். சில கட்சிகள் மதத்தை வைத்து அரசியல் செய்வதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

சில பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்களே என்னை பாஜகவின் ஊதுகுழல், பாஜக என் பின்னால் உள்ளது என கூறுகிறார்கள். என்ன உண்மையோ அதை சொல்கிறேன், என் பின்னால் பாஜக இருப்பதாக கூறுவது வருத்தமளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்