"மெரினா ஜல்லிக்கட்டு போராட்டம்.. முதல்முதலில் வந்து போராடியவர் நடிகர் மயில்சாமி தான்".. போராட்ட ஒருங்கிணைப்பாளரின் வைரல் பதிவு!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகர் மயில்சாமி, 57 வயதான நிலையில் சில நாட்களுக்கு முன்   அதிகாலை மாரடைப்பால் காலமானார்.

Advertising
>
Advertising

Also Read | "சிறந்த பெண் கோமாளி".. குக் வித் கோமாளியில் இருந்து விலகிய மணிமேகலை.. செஃப் வெங்கடேஷ் பட்டின் எமோஷனல் கமெண்ட்!!

நடிகர் மயில்சாமி, பல  தமிழ்ப் படங்களில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்தவர். மெமிக்ரி கலைஞராகவும் புகழ் பெற்றவர்.

1984-ஆம் ஆண்டு முதல் தமிழ் சினிமாவில்   நடித்து வந்த நடிகர் மயில்சாமி, கமல்ஹாசனின் அபூர்வ சகோதரர்கள், ரஜினிகாந்த் நடித்த பணக்காரன் உள்ளிட்ட  படங்களில் நடித்ததன் மூலம் அறியப்பட்டவர்.  2000- காலகட்டத்தில்  நடிகர் விவேக் & வடிவேலு ஆகியோருடன் இணைந்து பல திரைப்படங்களில் நகைச்சுவை காட்சிகளில் நடித்ததன் மூலம் மயில்சாமி பிரபலமானார்.

Images are subject to © copyright to their respective owners.

தவிர, காமெடி டைம், டைமுக்கு காமெடி உள்ளிட்ட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நடிகர் மயில்சாமி தொகுத்து வழங்கியுள்ளார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் அதிகாலை மாரடைப்பால் மயில்சாமி  உயிரிழந்தார்.  பின்னர் அஞ்சலிக்கு பிறகு நடிகர் மயில்சாமியின் உடல் வடபழனி மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

Images are subject to © copyright to their respective owners.

நடிகர் மயில்சாமிக்கு இரண்டு மகன்கள் (அன்பு, யுவன்) உள்ளனர். மூத்த மகன் அன்பு (அருமை நாயகம்) 'அல்டி' என்ற படத்தில் நடித்தவர்.  கடந்த 2020 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. கடந்த 2021 ஆம் ஆண்டு சிதம்பரம் ரயில்வே கேட் என்ற படத்திலும் அன்பு நடித்திருந்தார்.

இளைய மகன் யுவன், பா. ரஞ்சித் தயாரிப்பில் தண்டகாரண்யம் எனும் படத்தில் நடித்து வருகிறார். 2016 ஆம் ஆண்டு வெளிவந்த 'என்று தணியும்', சத்யராஜ் நடித்த 'தீர்ப்புகள் விற்கப்படும்' படங்களில் யுவன் மயில்சாமி நடித்துள்ளார்.

Images are subject to © copyright to their respective owners.

இந்நிலையில் நடிகர் மயில்சாமி, குறித்து சோழசேணை அமைப்பின் நிறுவனரும் 2017 ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டு போராட்டத்தை ஒருங்கிணைத்த மாணவர்களில் ஒருவரான அருமொழி சதீஷ் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில், "சமீபத்தில் நடிகர் மயில்சாமி மறைந்த போது, பல பதிவுகளை பார்க்க முடிந்தது.ஆனால் அவரோடு சம்மந்தப்பட்ட ஏதோ ஒன்றை மறந்தது போல எனக்கு ஒரு உள்ளுணர்வு.பகாசூரன் திரைப்பட இயக்குனர் திரு.மோகன் ஜி அவருடனான, பழைய மெசெஜ் சாட்டுகளை பார்த்த போது ஒரு வரலாற்றுத்தகவல் கிடைத்தது.

2017 ஆம் ஆண்டு இரண்டாவதாக நடந்த மெரினா ஜல்லிக்கட்டு, முதல் நாளிலேயே உணர்வோடு போராட்ட களத்திற்கு வந்த முதல் நடிகர் திரு.மயில்சாமி அவர்கள்…
பிறகு தான் அத்துனை பிரபல நடிகர்களும், இன்ன பிற துணை நடிகர்களும்…

Images are subject to © copyright to their respective owners.

இதனை எதற்காக எடுத்து பதிவிட வேண்டியிருக்கிறது என்றால், இது ஆவணப்படுத்தவில்லை என்றால், வேறொருவரை முன்மாதிரியாக காட்டிவிட்டு போய்விடுவார்கள்." என பதிவிட்டு மோகன் ஜி உடன் பேசிய ஸ்கீரின் ஷாட்டையும் இணைத்துள்ளார். நடிகர் மயில்சாமி ஜல்லிக்கட்டு போராட்டத்தில் ஈடுபட்ட புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.

Also Read | "ஒரு மாசம் அதை நெனச்சு அழுதேன்".. சிக்கித் தவித்த இஷாந்த்.. தோனி, தவான் செய்த விஷயம்.. நெகிழ்ச்சி பின்னணி!!

MAYILSAMY, JALLIKATU, JALLIKATU MARINA BEACH PROTESTS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்