உதவியாளரிடம் கோபமாக கத்திக்கொண்டே வந்த வரலட்சுமி .. கேமராவ பார்த்ததும் செய்த காரியம்..! அவரே வெளியிட்ட வைரல் ரீல்ஸ் வீடியோ 😍
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாகவும் குணச்சித்திர நடிகையாகவும் மற்றும் வில்லி நடிகையாகவும் பிரபலமாக நடித்து வருபவர் நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமி சரத்குமார்.
இயக்குனர் விக்னேஷ் சிவனின் இயக்கத்தில் நடிகர் சிம்புவுடன் இணைந்து போடா போடி திரைப்படத்தில் நடித்ததன் மூலம் இவர் பிரபலமானார். இந்த படத்தை தொடர்ந்து தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட பழமொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்த இவர் முன்னணி நடிகர்களான விஜய், விஷால் உள்ளிட்ட பலரது திரைப்படங்களிலும் நடித்து அசத்தியிருக்கிறார்.
குறிப்பாக விஷாலின் சண்டைக்கோழி படத்திலும், விஜய்யின் சர்கார் படத்தொலும் நெகடிவ் ரோலில் நடித்த வரலட்சுமி, முன்னதாக இயக்குனர் பாலா இயக்கத்தலான தாரை தப்பட்டை திரைப்படம் மூலம் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தார். மேலும் வரலட்சுமி சரத்குமார் அண்மையில் இயக்குனர் பார்த்திபன் இயக்கத்தில் வெளியான இரவின் நிழல் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தார்.
இப்படித்தான் நடிக்க வேண்டும், இந்த கேரக்டர்தான் நடிக்க வேண்டும் என்று இல்லாமல் எந்த கேரக்டரில் நடித்தாலும் அதை அழுத்தமாகவும் வலிமையுடனும் நடிக்க கூடிய வரலட்சுமி சரத்குமார், சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கிறார். அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டிருக்கும் ஒரு ஜாலியான வீடியோ வைரலானது.
அதில் கோபமாக தன் உதவியாளரிடம் கத்திக்கொண்டே வரும் வரலட்சுமி, திடீரென கேமராவை பார்த்ததும் டக்கென்று புகைப்படத்துக்கு போஸ் கொடுக்கிறார். மீண்டும் கத்திக்கொண்டே கேரவனுக்குள் செல்கிறார். “நடிகர்களின் வாழ்க்கை இப்படித்தான்” என்று கேப்ஷனிட்டு இன்ஸ்டாகிராமில் வரலட்சுமி பதிவிட்டுள்ள இந்த ரீல்ஸ் வீடியோ ரசிகர்களிடமும் நடிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்