Breaking: நடிகர் கமல்ஹாசனுக்கு 'கொரோனா' பாஸிட்டிவ்...! - மருத்துவமனையில் அனுமதி...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

அமெரிக்க பயணம் மேற்கொண்ட நடிகர் கமல்ஹாசன் அவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை அவர் தன் டிவிட்டர் மூலம் உறுதிப்படுத்தியுள்ளார்.

Breaking: நடிகர் கமல்ஹாசனுக்கு 'கொரோனா' பாஸிட்டிவ்...! - மருத்துவமனையில் அனுமதி...!
Advertising
>
Advertising

தமிழ் திரைப்பட உலகின் ஜாம்பவான்களில் ஒருவரான, மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் திரு.கமல் ஹாசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தற்போது அமெரிக்காவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட திரு.கமல்ஹாசன் இந்தியாவிற்கு திரும்பியுள்ளார். இந்நிலையில் அவருக்கு லேசான இருமல் இருந்த காரணத்தால் அவர் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார்.

அப்போது அவருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து தன் சமூகவலைத்தள பக்கத்தில் பதிவு செய்துள்ள அவர் 'அமெரிக்கப் பயணம் முடிந்து திரும்பிய பின் லேசான இருமல் இருந்தது. பரிசோதனை செய்ததில் கோவிட் தொற்று உறுதியானது. மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். இன்னமும் நோய்ப்பரவல் நீங்கவில்லையென்பதை உணர்ந்து அனைவரும் பாதுகாப்பாக இருங்கள்'

தற்போது திரு. கமல் ஹாசன் சென்னை போருரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனியார் தொலைக்காட்சியில் நடைபெறும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்குக் கொள்வாரா என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

 

KAMAL HAASAN, COVID, MNM, POSITIVE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்