நடிகரும் முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் காலமானார்!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே.கே.ரித்திஷ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 46. 

’சின்னபுள்ள’படத்தில் அறிமுகமான ரித்திஷ், கானல்நீர், நாயகன், பெண்சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். அண்மையில்  இவர் நடித்த எல்.கே.ஜி. படம் பலராலும் பாராட்டப்பட்டது.    

2009-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம்  தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக களம் இறங்கி வெற்றி பெற்று பாராளுமன்றம் சென்றார்.  பதவியேற்பின்போது ரித்திஷின் நடை,உடை, தோற்றத்தை பார்த்து ப.சிதம்பரத்திடம் சோனியாகாந்தி விசாரித்ததாகவும், ப.சிதம்பரம் இவரைப்பற்றி கூறியதாகவும் அப்போது தகவல் வெளியாகின.

ராமநாதபுரம் தொகுதி திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.கே.ரித்திஷ், 2014ம் ஆண்டில் அதிமுகவில் இணைந்தார். சென்னை போயஸ் கார்டனில் முதலமைச்சர் ஜெயலலிதாவை சந்தித்து, அதிமுகவில் அவர் இணைந்தார்.

நடிகர் சங்கம், தயாரிப்பாளர் சங்கத்திலும் முக்கிய பொறுப்புகளில் இருந்தவர் ரித்திஷ். இந்நிலையில் அவர் மக்களவைத் தேர்தலுக்காக ராமநாதபுரம் தொகுதி பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரனை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக ராமநாதபுரம் சென்றிருந்ததாகத் தெரிகிறது. அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து அவர் மாரடைப்பால் உயிரிழந்தார் என்பது உறுதி செய்யப்பட்டது. 

RITHESH, ACTOR, HEARTATTACK

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்