‘கெத்தா நடந்து வந்து’ ஜனநாயக கடமையை நிறைவேற்றிய ரஜினி.. எந்த தொகுதி தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய துணைக்கண்ட ஜனநாயகத்தின் முக்கிய நாளாக, பொதுத் தேர்தல் நாளான இன்றைய நாள் பார்க்கப்படுகிறது. நடிகர், நடிகையர், புகழ்பெற்றவர்கள் தொடங்கி அனைவருமே ஜனநாயகக் குடிமகனாக, சாமானியனாக தங்களது வாக்களிக்கும் கடமைகளை நிறைவேற்றி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகரும், அரசியலாளருமான நடிகர் ரஜினிகாந்த், தனது வாக்கினை இன்று காலை பதிவு செய்துள்ளார். மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சென்னை ஸ்டெல்லா மேரிஸ் வாக்குச் சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை தனது வாக்கினை பதிவு செய்ய வருகை தந்தார்.
அப்போது ரஜினிகாந்தின் ரசிகர்கள், ‘தலைவா.. தலைவா’ என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கினர். அவர்களைக் கடந்துசென்று நடிகர் ரஜினிகாந்த் வாக்குச்சாவடியில் வாக்கு ஒப்புகைச் சீட்டினை வாங்கிக்கொண்டு, வாக்காளரின் ரகசிய கேபினுக்குள் சென்று வாக்களித்தார்.
ரஜினி மக்கள் மன்றம் தொடங்கி, ரசிகர்கள் மற்றும் தொண்டர்களின் ஏகோபித்த ஆதரவுடன் இயங்கிக் கொண்டிருக்கும் ரஜினிகாந்த், தமது இலக்கு சட்டமன்றத் தேர்தல்தான் என்றும், நாடாளுமன்ற பொதுத் தேர்தல் அல்ல என்றும் முன்னமே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘வேலூர் தொகுதி தேர்தல் ரத்துக்கு எதிரான வழக்கு’.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
- 'அது எப்படி எதிர்க்கட்சித் தலைவருங்க பத்தி மட்டும் வருமான வரித்துறைக்கு துப்பு கிடைக்குது’.. ப.சிதம்பரம் ட்வீட்!
- ‘இந்த ஏரியா மக்கள் காலையிலே போய் ஓட்டு போடுங்க.. கனமழை இருக்கு’..வெதர்மேன் அலெர்ட்!
- ‘10 பேர் டீமா போங்க.. 2 பேர் போலீஸ் வருதான்னு பாருங்க..’.. பணப்பட்டுவாடா வீடியோவால் பரபரப்பு!
- 'வழி அனுப்ப வந்தவனையே'...'வழி அனுப்பி விடுறதுனா',இது தானா'?...கொதிப்பில் வேட்பாளர்!
- ‘யாருக்கு ஓட்டு போடுறீங்க.. மோடி கேமரா பிக்ஸ் பண்ணியிருக்காரு.. ஜாக்கிரத’..பாஜக எம்எல்ஏ சர்ச்சை பேச்சு!
- ‘ஆளுங்கட்சியினர் ரூ.2000 நோட்டு கொடுக்கும் வீடியோக்கள்.. ஏன் நடவடிக்கை இல்லை?’ ஸ்டாலின் அதிரடி கேள்வி!
- 'கனிமொழி வீட்டில் எதுவும் கெடைக்கல.. ஆனா ரெய்டு போனது ஏன் தெரியுமா?’.. சத்யப்பிரதா சாஹூ!
- அதிக பணப்பட்டுவாடா.. வேலூர் தொகுதியில் தேர்தல் ரத்து.. ஸ்டாலின் ஆவேசம்!
- கையில குழந்தையோட வந்து.. கண்ணீரோட நிமிந்து பாக்குறாங்க.. உணர்ச்சிகரமான கமலின் புதிய வீடியோ!