வீரமரணம் அடைந்த பழனியின் குடும்பத்துக்கு நடிகர் கருணாஸ் ரூ.1 லட்சம் நிதி உதவி!.. குழந்தைகளின் கல்விக் கட்டணத்தையும் ஏற்றார்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்இந்திய எல்லையில் சீனா நடத்திய தாக்குதல் காரணமாக வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார்.
லடாக் பகுதியில் நடந்த இந்தியா - சீனா மோதலில் 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதில் தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம், கடுக்கலூரை சொந்த ஊராக கொண்ட பழனி என்ற வீரரும் வீர மரணம் அடைந்தார்.
அவரது மறைவுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்பட அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்திருந்தனர். அதைத் தொடர்ந்து, நேற்று முன்தினம் பழனியின் உடல் ராணுவ மரியாதையுடன் அவர் சொந்த ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்நிலையில், வீரமரணம் அடைந்த ராணுவ வீரர் பழனி குடும்பத்திற்கு திருவாடனை சட்டமன்ற உறுப்பினரும் நடிகருமான கருணாஸ் தனது சொந்த நிதியிலிருந்து ஒரு லட்சம் ரூபாய் வழங்கி உள்ளார். மேலும், பாதிக்கப்பட்ட குடும்பத்தை இன்று நேரில் சந்தித்த அவர், பழனியின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்தார். அதுமட்டுமன்றி பழனி மகன்களுக்கான பள்ளி மற்றும் கல்லூரி கட்டண செலவை தாம் முழுவதுமாக ஏற்றுக் கொள்ள இருப்பதாக நடிகர் கருணாஸ் தெரிவித்துள்ளார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'வைரஸ் பரவலைத் தொடர்ந்து...' 'சீனாவிலிருந்து' கிளம்பும் 'அடுத்த பூதம்...' 'ஆஸ்திரேலியாவைத்' தொடர்ந்து 'இந்தியாவுக்கு' வரவிருக்கும் 'ஆபத்து...'
- 'புல்டோசர்களை வச்சு சீனா செஞ்ச வேலை'... 'காட்டிக்கொடுத்த செயற்கைக்கோள்'... அதிர்ச்சியளிக்கும் புகைப்படங்கள்!
- 'சீனர்களின்' ரகசியம் சொல்லும் 'முன்னாள் அதிகாரி...' 'உபசரிக்கும்' போதே முதுகில் 'குத்துபவர்கள்...' அவர்களிடம் 'யுத்த நெறி' பயன்படாது...
- 'என் லவ்வ புரிஞ்சுக்காம அவாய்ட் பண்ணிட்டான்...' '30,000 அடி உயரத்தில விமானம் பறந்துக்கிட்டு இருக்குறப்போ...' காதலி செய்த அதிர்ச்சி காரியம்...!
- ராணுவ வீரர் 'இறந்து' போனதாக துக்கத்தில் மூழ்கிய குடும்பம்... 'கடைசியாக' வந்த போன் காலில்... கிடைத்த வேற லெவல் அதிர்ச்சி!
- 'இந்தியா... தைவான்... ஹாங்காங்!'.. ட்ரெண்டிங்கான 'மில்க் டீ' கூட்டணி!.. ஏக கடுப்பில் சீனா!.. இந்தியாவுக்கு பெருகும் ஆதரவு!
- இந்திய வீரர்களை தாக்க ‘முன்கூட்டியே’ கொண்டு வரப்பட்ட ‘முள்கம்பி’.. வெளிச்சத்துக்கு வந்த சீனாவின் ‘சதித்திட்டம்’!
- 'சீனாவின் குட்டி படை வீரர்கள்'... 'போர்முனை ரோபோவை சோதனை செய்த சீனா'... கிளம்பியுள்ள பரபரப்பு!
- ‘கடைசி வரை நிறைவேறாமல் போன ஆசை’.. ‘வீரமரணம்’ அடைந்த கணவர்.. சோகத்தில் மூழ்கிய குடும்பம்..!
- 'விளம்பரம்' பண்ண 'மட்டும் அல்ல...' 'இது வேணாம்னு' சொல்லவும் 'நாங்க வருவோம்...' 'ஓங்கி ஒலிக்கும்' விளையாட்டு' வீரரின் 'முதல் குரல்...'