ஒரே வீட்டில் ஒரே பெயரில் பல EB கனெக்‌ஷன் வாங்கி இருக்கீங்களா..? மின் வாரியம் எச்சரிக்கை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: ஒரே வீட்டு வளாகத்தில் ஒரே பெயரில் பல மின் இணைப்பு இருப்பது தெரியவந்தால், அது தொடர்பான அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் எச்சரித்துள்ளது.

ஒரே வீட்டில் ஒரே பெயரில் பல EB கனெக்‌ஷன் வாங்கி இருக்கீங்களா..? மின் வாரியம் எச்சரிக்கை..!
Advertising
>
Advertising

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், பலமுறை அறிவுறுத்தியும் ஒரு வளாகத்தில் ஒரு பெயரின் கீழ் பல இணைப்புகள் சட்டவிரோதமாக வழங்குவது தொடர்ந்து கொண்டே இருப்பதாகவும், ஒரு வளாகத்தில் ஒரே பெயரின் கீழ் உள்ள தாழ்வழுத்த (எல்டிசிடி) மின் இணைப்புகள் குறித்து தொடர் ஆய்வுகளை நடத்துமாறு, பகிர்மானப் பிரிவு தலைமைப் பொறியாளர்களுக்கு மீண்டும் அறிவுறுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Action will be taken if multiple power connections under one name

மேலும், பெற்ற இணைப்பை ஒருங்கிணைக்காமலும், உயரழுத்த இணைப்பாக மாற்றாமலும் உள்ள நுகர்வோருக்கு 3 மாத அவகாசம் வழங்கும் வகையில் நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இது தொடர்பான உயரதிகாரிகளின் ஆய்வின் போது, பல இணைப்புகள் ஒரே பெயரின் கீழ் ஒரே வளாகத்தில் இருப்பது தெரியவந்தால் பொறுப்பு அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு குடியிருப்பிலும் எத்தனை இணைப்புகள் கொடுக்கப்பட்டது என கணக்கெடுக்க வேண்டும். குளிர்சாதன கருவி, குடிநீர் விநியோகம், பொது இடங்களில் பயன்படுத்தும் மின் விளக்குகள், தடையற்ற மின்விநியோகம் செய்யும் கருவி உள்ளிட்டவற்றுக்கு ஒரே வளாகத்துக்குள் தனி இணைப்பு கண்டிப்பாக வழங்கக் கூடாது.

மீண்டும் வழங்கப்பட்ட அறிவுறுத்தல்களைப் பின்பற்றி ஆய்வு மேற்கொண்டு வாரியத்துக்கு ஏற்படும் வருவாய் இழப்பைத் தடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி, அனைத்து மின் பகிர்மான வட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இதுதொடர்பாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் மின்சார ஒழுங்குமுறை ஆணைய விதிகளுக்கு முரணாக இணைப்பு வழங்கப்பட்டது தெரியவந்துள்ளது.

அங்குள்ள குடியிருப்புகளை ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என தணிக்கைக் குழு உத்தரவிட்டுள்ளது. இதனை அடுத்து அனைத்துத் தலைமைப் பொறியாளர்களுக்கு, வணிகப் பிரிவு தலைமைப் பொறியாளர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

POWERCONNECTIONS

மற்ற செய்திகள்