‘பிறந்தநாள் கொண்டாடிவிட்டு’... ‘கல்லூரி நண்பர்கள் திரும்பியபோது’... ‘சென்னையில் நடந்த கோர விபத்து’!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னையில் அதிவேகத்தில் சென்ற கார், தடுப்புச் சுவரில் மோதியதில், அதில் பயணித்த மாணவர்கள் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை வண்டலூர் அருகே இயங்கி வருகிறது தனியார் கல்லூரி. இங்கு படித்து வரும் மாணவர்கள் 7 பேர், நண்பனின் பிறந்தநாளைக் கொண்டாட முடிவு செய்துள்ளனர். அதன்படி, கடந்த சனிக்கிழமை இரவு, கிழக்குக் கடற்கரை சாலைக்கு காரில் சென்றுள்ளனர். பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு காரில் வீடு திரும்பிக் கொண்டிருந்தனர். அதிகாலை 2 மணியளவில் ஈஞ்சம்பாக்கம் அருகே வந்து கொண்டிருந்தபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், சாலை தடுப்புச்சுவரில் மோதி விபத்துக்குள்ளானது.
மேலும் தடுப்புச்சுவரில் மோதிய வேகத்தில், நிலைத் தடுமாறிய கார், சில மீட்டர் தூரத்துக்கு உருண்டு சென்றுள்ளது. இந்த விபத்தில் அகமது பாகிம் மற்றும் முகமது சஜின் ஆகிய 2 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 4 மாணவர்கள் படுகாயங்களுடன் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். காரை ஓட்டிய மாணவர் சீட்பெல்ட் அணிந்திருந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் லேசான காயங்களுடன் உயிர்தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'சார் கொஞ்சம் திரும்புங்க'.. 'முதுகில் தட்டிய மர்ம நபர்கள்'.. சென்னையில் இயக்குநருக்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘ரயில் எஞ்சின் அடியில் சிக்கிய பெண்’.. ‘நீண்ட போராட்டத்திற்கு பின் மீட்கப்பட்ட’.. ‘பதைபதைக்க வைக்கும் வீடியோ’..
- ‘மினி லாரியும் பைக்கும்’.. ‘நேருக்கு நேர் மோதிய பயங்கர விபத்தில்’.. ‘மாணவர்களுக்கு நடந்த பரிதாபம்’..
- 'எதிரே வந்த ரயில்'...'தண்டவாளத்தை கடந்த யானை'...ஒரே செகண்ட் தான்'...மனதை ரணமாக்கும் வீடியோ!
- ‘காதலுக்கு தடையாக இருந்த சாதி’... ‘இளம்பெண் எடுத்த முடிவு’!
- ‘திடீரென வெடித்த டயரால்’.. ‘ஜீப் மீது வேன்’.. ‘நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து’..
- சட்டவிரோத கடத்தல்...'தங்கச்சுரங்கம்' இடிந்து விழுந்து 30 பேர் பலி!
- 'திடீரென திரும்பிய பைக்'... நிலைத்தடுமாறி கவிழ்ந்த லாரி... நொடியில் நடந்த பரிதாபம்!
- ‘பராமரிப்பு பணி காரணமாக’.. ‘29ஆம் தேதி 44 மின்சார ரயில்களின் சேவை ரத்து’.. ‘விவரங்கள் உள்ளே’..
- 'அப்டியெல்லாம் விட முடியாது'.. 'பேனர் சரிந்து சுபஸ்ரீ பலியான விவகாரம்'.. 'அதிமுக பிரமுகர் வீட்டில் நோட்டீஸ்'!'