'சப்-இன்ஸ்பெக்டர்னா..?'.. காய்ச்சி எடுத்த அசிஸ்டண்ட் கமிஷ்னர்.. பரபரப்பு வீடியோ!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

தமிழ்நாட்டில் மிக சமீபத்தில் காவல்துறை, இருசக்கர வாகன ஓட்டிகள் கட்டாயமாக ஹெல்மெட் அணிவதை வலியுறுத்தி பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. முன்னதாக இருசக்கர வாகனத்தில் அமர்ந்து செல்லும் இருவருமே கட்டாயமாக ஹெல்மெட் அணிந்தாக வேண்டும் என்கிற சட்டம் அமலுக்கு வந்திருந்தது.

ஆனால் வந்த சில நாட்களிலேயே அந்த சட்டம் விதிமீறலுக்குட்பட்டதாக மாறிப்போக, பழையபடி வாகன ஓட்டிகள் ஹெல்மெட்டை மறந்தேவிட்டனர். வெறும் போக்குவரத்து விதிகளை பின்பற்றப்படுவதற்காக இந்த சட்டம் போடப்படுவதில்லை, அதில் மனித உயிரின் முக்கியத்துவம் அடங்கியிருக்கிறது என்பதை உணராத பலரும் ஹெல்மெட்டை தவிர்க்கத் தொடங்கினர்.

தற்போது மீண்டும் நீதிமன்ற ஆணையின் பேரில் மீண்டும் காவல்துறையினர் ஹெல்மெட் அணியாதவர்களை மிகவும் கட்டாயமாகவும் கண்டிப்புடனும் கண்டித்து வருகின்றனர். இதன் காரணமாக பலர் மீது வழக்குப்பதிவும், பலர் மீது அபராதங்களும் கடந்த வாரத்தில் போடப்பட்டுள்ளன. இதே நேரத்தில் காவல் அதிகாரிகளுக்கும் இந்த விதி கட்டாயமாக பின்பற்றப்படவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில், சென்னை காமராஜர் சாலையில் சட்டம் ஒழுங்கு காவலர் ஒருவர் ஹெல்மெட் போடாமல் வந்தபோது, அவரை மறித்த அசிஸ்டண்ட் கமிஷனர், பைக்கை ஓரங்கட்டச் சொல்லி காய்ச்சி எடுத்துள்ளார். அதன்படி, ‘காவலர் என்றால் ஹெல்மெட் போட மாட்டீங்களா? நீங்களே விதிகளை பின்பற்றவில்லை என்றால் பொதுமக்கள் எப்படி இருப்பார்கள்? ஏன் இப்படி பொறுப்பில்லாம இருக்கீங்க?’ என்பன போன்ற பல கேள்விக்கணைகளை அந்த சப்-இன்ஸ்பெக்டர் மீது தொடுத்துள்ளார்.

இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

TRAFFIC, HELMET, POLICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்