'இரவில் ஓடிக்கொண்டிருந்த ஏசி'... 'திடீரென பயங்கர சத்தத்துடன் வெடித்த பயங்கரம்'... சென்னையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்சென்னை கீழ்பாக்கம் பர்னபி சாலையைச் சேர்ந்தவர் முத்து ராஜா. இவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணிபுரிந்து வருகின்றார். இந்நிலையில் நேற்றிரவு 10 மணியளவில் முத்து ராஜா தனது வீட்டின் முதல் தளத்தில் உள்ள ஏசி அறையில் தூங்கிக் கொண்டு இருந்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக ஏசி பலத்த சத்தத்துடன் ஏசி வெடித்துச் சிதறி எரியத் தொடங்கியுள்ளது.

இதைச் சற்றும் எதிர்பாராத முத்து ராஜா அலறி அடித்துக் கொண்டு வீட்டிற்கு வெளியே ஓடி வந்துள்ளார். இதையடுத்து உடனடியாக கீழ்பாக்கம் தீயணைப்புத்துறைக்கு அவர் தகவல் கொடுத்துள்ளார். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் ஏசியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர். மேலும் சம்பவம் குறித்து கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்துள்ளனர். மின்கசிவு காரணமாக எரிந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இரவில் எதிர்பாராத விதமாக ஏசி வெடித்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
சோபாவுக்கு பின்னாடி கிடைச்ச 50 வருட பழைய ‘லெட்டர்’.. படிச்சு பார்த்து ஆச்சரியத்தில் உறைந்த தம்பதி..!
தொடர்புடைய செய்திகள்
- 'ஏங்க... உங்க பேரு லிஸ்ட்லயே இல்லைங்க'!.. 'எங்கிருந்தோ வந்து... எல்லாத்தையும் சல்லி சல்லியா நொறுக்கிட்டாரு பா!'.. இந்திய வீரர்களை அலறிவிட்டு.. சம்பவம் செய்தது எப்படி?
- ‘2 தடவை மாட்டல, அப்போ மறுபடியும் அதே மாதிரி போவோம்’.. சென்டிமென்ட்டால் சிக்கிய நபர்.. சென்னையில் நடந்த ருசிகரம்..!
- தளபதியோட ‘வெறித்தனமான’ Fan-ஆ இருப்பாங்க போலயே.. நான் மலேசியாவில் இருந்து ‘சென்னைக்கு’ வந்ததே இதுக்காகதான்..!
- ‘டெப்போவுல நிறுத்தி வெச்சது குத்தமாயா?’.. ‘MTC பேருந்தையே ஆட்டையப் போடப் பார்த்த மர்ம நபர்!’.. சென்னை மாநகரில் நடந்த ‘பகீர்’ சம்பவம்!
- “ஷாக் ஆயிட்டேன்!”.. ஷங்கர் வெளியிட்ட அறிக்கை! எழும்பூர் நீதிமன்றத்தின் ‘பரபரப்பு’ விளக்கம்!
- 'சென்னையில் நடைபெறும் டெஸ்ட்'... ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி!
- தமிழகத்தின் இன்றைய கொரோனா நிலவரம்!.. பிரிட்டனில் இருந்து வந்தவர்களில் எத்தனை பேருக்கு கொரோனா?.. சென்னையின் நிலை என்ன?.. முழு விவரம் உள்ளே
- அடடடடா!.. இந்த மனுஷன் மட்டும் ஏன் இப்படி இருக்காரு?.. எங்க போனாலும்... இத மட்டும் விடமாட்றாரு!.. சென்னையில் விராட் தரமான சம்பவம்!!
- சார் உங்க ‘Whatsapp-க்கு’ ஒரு வீடியோ அனுப்பி இருக்கேன்.. உடனே போனை கட் செய்த ‘இளம்பெண்’.. சென்னை தொழிலதிபருக்கு நடந்த அதிர்ச்சி..!
- சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மின்சார ரயில்கள் ‘பாதி வழியில்’ ரத்து.. தெற்கு ரயில்வே ‘முக்கிய’ அறிவிப்பு..!