எவ்வளவு தண்ணீர் பாய்ந்தாலும் நிரம்பாத அதிசய கிணறு.. IIT நிபுணர்கள் கண்டறிந்த ஆச்சர்யம் அளிக்கும் உண்மை..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

திருநெல்வேலி மாவட்டத்தில் அமைந்துள்ள அதிசய கிணற்றின் நெடுநாள் மர்மத்தை ஐஐடி ஆராய்ச்சியாளர்கள் வெளிக்கொண்டுவந்துள்ளனர்.

Advertising
>
Advertising

Also Read | "இவங்க 2 பேருக்குமே தங்கப்பதக்கம் கொடுக்கணும்".. பாகிஸ்தான் வீரரின் பதிவில் நீரஜ் சோப்ரா போட்ட கமெண்ட்.. நெகிழ்ந்துபோன ஆனந்த் மஹிந்திரா..!

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை அருகே ஆயன்குளம் அதிசய கிணறு அமைந்துள்ளது. கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையின்போது இந்த கிணற்றுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கன அடி நீர் சென்றது. இருப்பினும் இந்த கிணறு நிரம்பவில்லை. இதனால் ஆச்சர்யம் அடைந்த உள்ளூர் மக்கள் இந்த கிணற்றை ஆர்வத்தோடு பார்த்து சென்றனர். கொஞ்ச நாளிலேயே இந்த கிணறு தமிழகம் முழுவதும் பிரபலமடைந்தது.

ஆய்வு

இதனை தொடர்ந்து சென்னை ஐஐடி-யை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இந்த அதிசய கிணற்றை ஆய்வு செய்ய திட்டமிட்டனர். அதிக திறன் வாய்ந்த கேமரா உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளுடன் களத்தில் இறங்கிய ஆராய்ச்சியாளர்கள் சுமார் மூன்று மாத காலம் இந்த பகுதியை ஆய்வுக்கு உட்படுத்தி வந்தனர். இந்நிலையில், இந்த கிணறு நிரம்பாததன் காரணத்தையும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்திருக்கின்றனர்.

ஆய்வாளர்களின் கருத்துப்படி, இந்த கிணற்றின் சுற்றுப்பகுதி சுண்ணாம்பு கற்களால் உருவாகியுள்ளது. இது நீரில் உள்ள ஆக்சிஜனுடன் வினைபுரிந்து குகைகளை உருவாக்குவதாக தெரிவித்திருக்கின்றனர் நிபுணர்கள். ஆரம்பத்தில் சிறிய துவாரங்களாக உருவாகி காலப்போக்கில் இவை பிரம்மாண்ட பாதள குகைகளாக மாற்றம் அடைவதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

நிலத்தடி நீர் மட்டம்

மழைக்காலங்களில் நீரானது இந்த குகைகள் வழியாக பயணிப்பதையும் நிபுணர்கள் கண்டறித்திருக்கின்றனர். இதனால் மழை காலங்களில் இந்த கிணறு அமைந்திருக்கும் பகுதியில் இருந்து சுமார் 6 கிலோமீட்டர் சுற்றளவுக்கு நிலத்தடி நீர் மட்டம் உயர்வதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்திருக்கின்றனர். இது மட்டும் அல்லாமல் இந்த பகுதியில் பல கிணறுகள் இதேபோன்று இருப்பதாக கூறிய ஆராய்ச்சியாளர்கள் "இது உண்மையாகவே அதிசய கிணறு தான்" என்கின்றனர். இதனிடையே சட்டப்பேரவை தலைவர் அப்பாவு, நெல்லை மாவட்ட ஆட்சியர் விஷ்ணு ஆகியோரும் இந்த ஆய்வை பார்வையிட்டனர்.

எவ்வளவு தண்ணீர் பாய்ந்தாலும் நிரம்பாத அதிசய கிணற்றின் பின்னணியை ஆய்வு குழுவினர் வெளிவந்திருக்கும் நிலையில், அப்பகுதியில் இதேபோன்று இருக்கும் பிற கிணறுகளிலும் ஆய்வு தொடரும் என நிபுணர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

Also Read | சாலை விபத்தில் மரணமடைந்த முன்னாள் நடுவர்.. வீரேந்தர் சேவாக் நினைவுகூர்ந்த உருக்கமான சம்பவம்.. கலங்கிப்போன ரசிகர்கள்.!

TIRUNELVELI, AAYANKULAM, WELL, IIT RESEARCHERS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்