இனி ஸ்விக்கி, சொமாட்டோவில்... ஆவின் பால், ஐஸ்கிரீம், தயிர், குளோப்ஜாமூன்... எல்லாமே 'ஆர்டர்' பண்ணலாம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்கொரோனா காரணமாக தற்போது உணவு டெலிவரி நிறுவனங்களான ஸ்விக்கி, சொமாட்டோவுக்கு அரசு நேரக்கட்டுப்பாடு விதித்து உள்ளது. இதனால் காலை, மதியம், இரவு ஆகிய 3 நேரங்களிலும் ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் குறிப்பிட்ட நேரம் மட்டுமே இயங்கி வருகின்றன.
இந்த நிலையில் ஆவின் பால் மற்றும் ஆவின் பொருட்களை ஸ்விக்கி, சொமாட்டோ வழியாக மக்களுக்கு விநியோகம் செய்ய ஆவின் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. மக்களுக்கு தங்கு தடையின்றி பொருட்கள் கிடைக்க தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வருகிறது.
அந்த வகையில் முன்னதாக 'சூப்பர் டைலி ஆப்' என்னும் தனியார் நிறுவனம் மூலம் ஆவின் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அதேபோல ஸ்விக்கி, சொமாட்டோ நிறுவனங்கள் வழியாக பால் மற்றும் பால் பொருட்களை விற்பனை செய்ய ஆவின் நிறுவனம் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
ஆவின் பால் மற்றும் நெய், ஐஸ்கிரீம், குலோப்ஜாம், குளிர்பானங்கள், மைசூர்பாகு, லஸ்ஸி, தயிர், மோர் போன்ற பொருட்களை மேற்கண்ட நிறுவனங்களின் வழியாக ஆர்டர் செய்தால் அந்த பொருட்கள் உங்களின் வீட்டுக்கே டெலிவரி செய்யப்படும். இதுகுறித்து ஆவின் நிர்வாகி ஒருவர் இன்னும் ஒருசில நாட்களில் ஆவின் பொருட்கள் ஸ்விக்கி, சொமாட்டோ வழியாக உங்கள் வீடு தேடி வரும் என தெரிவித்து இருக்கிறார்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'உச்சகட்டத்தை' அடைந்துள்ள 'கொரோனா' தாக்குதல்... 'இனி' படிப்படியாக... 'காலியான' நாடாளுமன்றத்தில் பேசிய 'பிரதமர்'...
- “லாக்டவுன் நேரத்துல எங்க வந்தீங்க?”.. வாகன ஓட்டியை நிற்கச்சொன்ன டிராபிக் காவலருக்கு நேர்ந்த கதி!
- பச்சிளம் குழந்தைகளை வீட்டுக்கு எடுத்துச் செல்ல தயாரான தாய்மார்கள்!... கடைசி நிமிடத்தில் வந்த பரிசோதனை முடிவு!... நெஞ்சை உலுக்கும் துயரம்!
- 'குண்டா' இருக்குறவங்கள 'கொரோனாவுக்கு'ரொம்ப 'பிடிக்குமாம்...' 'உடற்பருமன்' கொண்டவர்கள் 'ஜாக்கிரதை'...! 'புதிய ஆய்வில் தகவல்...'
- 'ஊரடங்கு' முடிந்ததும்... ஏப்ரல் 15-லிருந்து 'ரயில்' சேவை 'தொடங்கப்படுகிறதா?'... ரயில்வே துறை வெளியிட்டுள்ள 'அறிக்கை'...
- '3-ம் நிலைக்கு போகலாம்'...'அதுக்கு வாய்ப்பிருக்கு'... 'எச்சரித்த முதல்வர்'...ஊரடங்கு நீட்டிக்கப்படுமா?
- கொரோனா தடுப்பு பணியில்... செவிலியர்கள் 'சேலை' அணிய தடை!... என்ன காரணம்?
- 'ஃபிரிட்ஜிக்குள்' புகுந்த '6அடி நீள பாம்பு'... 'அலறியடித்து' ஓட்டம் பிடித்த 'குடும்பத்தினர்...' வனத்துறையினரின் 'சாதுர்யமான செயல்'...
- 'பணத்தை' சிக்கனமாக 'செலவு' செய்யுங்கள்... 'இனிவரும்' காலங்கள் 'சவாலாக' இருக்கும்... தொழில்கள் 'புத்துயிர்' பெற 'ஆண்டுகள்' கூட ஆகலாம்... 'பொருளாதார' நிபுணர்கள் 'எச்சரிக்கை...'
- தமிழகத்தில் 'இன்று' மட்டும் புதிதாக '96 பேருக்கு' கொரோனா... சுகாதாரத்துறை செயலாளர் 'தகவல்'...