தமிழகத்தில் பாலின் கொள்முதல் விலையையும், பால் உற்பத்திக்கான அரசு விலையையும் தமிழக அரசு உயர்த்தி உத்தரவிட்டுள்ளது.
கிராமப்புறங்களைப் பொருத்தவரை இன்றைய தேதியில் மிகவும் அரிதாக மாடுகளைப் பண்ணைகளில் கொண்டு அன்றாடம் மாட்டுப்பால் உற்பத்தியாளர்கள் பாலினை சந்தைக்குக் கொண்டுவருகின்றனர். ஆனால் தற்போது முன்பை விட, மாட்டுத் தீவனம், வைக்கோல், மாடுகளின் பராமரிப்பு உள்ளிட்டவற்றுக்கு செலவுகள் அதிகரிக்கின்றன.
இதனால் மாடு வளர்ப்பவர்கள், தீவனங்களின் விலை உயர்ந்துவிட்டதாக புகார் அளித்ததன் பேரில், இதற்கு மாற்று நடவடிக்கையாக பசும்பால் மற்றும் எருமைப் பாலின் விலையை உயர்த்தி, இந்த செலவுகளை ஈடுகட்ட ஆவன செய்யுமாறு பால் உற்பத்தியாளர்கள் நலச்சங்கம் வலியுறுத்தி வந்தது.
இதுபற்றி முன்னதாகவே, தமிழக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி வந்ததாகவும், வேலூர் தேர்தல் முடிவுகளுக்கு பிறகு பால் விலை உயர்த்தப்படலாம் என்றும் கூறப்பட்டு வந்த நிலையில், தற்போது தமிழகத்தில் ஆவின் பாலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. இதேபோல் ஆவின் பசும்பால் கொள்முதல் விலை 4 ரூபாய் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 32 ரூபாயாகவும், எருமைப்பால் கொள்முதல் விலை 6 ரூபாய் உயர்த்தப்பட்டு லிட்டருக்கு 41 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்த விலையேற்றம் நாளை (ஞாயிறு ஆகஸ்டு 18, 2019) முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்னாது இவங்க இப்ப கலெக்டர் இல்லயா?'..மாறிய அதிகாரிகள்.. எங்க. எந்த கலெக்டர்.. விபரம் உள்ளே!
- "24 மணி நேரம், 7 நாள்.. 'இது' ஓகே, ஆனா 'இது' கூடாது".. தமிழக அரசின் புதிய அரசாணை!
- இனி ‘இந்த வகையான ஷோ’ க்களை டிவி-யில் ஒளிபரப்ப தடை : உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி!
- பொள்ளாச்சி வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெளியிட்ட எஸ்பி மீது ஒழுங்கு நடவடிக்கை: தமிழக அரசு!
- விங் கமாண்டர் அபிநந்தனுக்கு ‘பரம்வீர் சக்ரா’ விருது.. முதல்வர் கோரிக்கை!
- 1 மணி நேரத்துக்கு 5 ரூபாய்.. சென்னைக்கு வரவிருக்கும் வாடகை சைக்கிள்!