அடிதூள்.. 3 மாசம் வரையில் பயன்படுத்தலாம்... புதிய 'ஆவின் டிலைட்' பசும்பால்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்3 மாதம் வரையில் பயன்படுத்த கூடிய டிலைட் என்னும் பசும்பால் பாக்கெட்டுகளை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது ஆவின் நிறுவனம். இது மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
Also Read | 88-வது கல்யாணத்துக்கு ரெடியான 61 வயசு தாத்தா.. மணப்பெண் யாருன்னு பாத்துட்டு ஷாக் ஆன மக்கள்..
தமிழக அரசின் பால்வளத்துறையின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது ஆவின் நிறுவனம். பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து பாலை பெற்று அதனை சுத்திகரித்து விநியோகம் செய்து வருகிறது ஆவின். தமிழகம் முழுவதும் தினசரி 40 லட்சம் லிட்டர் பாலை ஆவின் நிறுவனம் கொள்முதல் செய்கிறது. இந்தப் பால் சமன்படுத்தப்பட்ட பால் (நீலம்), நிலைப்படுத்தப்பட்ட பால் (பச்சை), நிறை கொழுப்பு பால் (ஆரஞ்சு), இருமுறை சமன்படுத்தப்பட்ட பால் (மெஜந்தா) மற்றும் டீமேட் (சிவப்பு) போன்ற வகைகளில் பால் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இன்று ஆவின் டிலைட் எனும் பசும் பால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. இதனை பால்வளத்துறை அமைச்சர் நாசர் இன்று அறிமுகம் செய்தார். இந்த ஆவின் டிலைட்டில் 3.5% கொழுப்பும் இதர சத்துக்கள் 8.5 சதவீதம் உள்ளன. மேலும், குளிர்சாதன வசதி இல்லாமலேயே 90 நாட்கள் வரையிலும் இதனை பயன்படுத்தலாம் என ஆவின் நிறுவனம் தெரிவித்திருக்கிறது. பாக்டீரியா நீக்கம் செய்யப்பட்ட இந்த பாலில் வேறு எந்த preservatives-களும் சேர்க்கப்படவில்லை எனவும் ஆவின் நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது.
பொதுவாகவே பால் மக்களுக்கு அத்தியாவசிய உணவுப் பொருளாக கருதப்படுகிறது. மழை காலங்களில் போக்குவரத்து பாதிக்கப்படுவதால் அத்தியாவசிய தேவையான பாலை வாங்க முடியாமல் மக்கள் துயரத்தை சந்திப்பதை நாம் அறிந்திருப்போம். இத்தகைய சிக்கலை தீர்க்கவே இந்த ஆவின் டிலைட் பால் அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது. அசாதாரண சூழ்நிலையில் இந்த பாலை வாங்கி பலநாட்கள் வைத்து பயன்படுத்திட முடியும் என்பதே இதன் பெரிய ப்ளஸ். இந்நிலையில் 500 மிலி ஆவின் டிலைட் பால் 30 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
Also Read | KL ராகுலின் இமாலய சிக்ஸ்.. எதிரே நின்ன விராட் கோலி கொடுத்த ரியாக்ஷன்.. வைரலாகும் வீடியோ..!
மற்ற செய்திகள்