அன்று அத்துமீறிய உறவு? இன்று அம்மன் அவதாரமா? யார் இந்த அன்னப்பூரணி அரசு?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: 'அன்னபூரணி அரசு அம்மா' என்றும், 'ஆதிபராசத்தி அம்மா அவதரித்து விட்டார்' என்றும் கடந்த இரண்டு தினங்களாக, சமூக வலைத்தளங்களில், புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் அதிகம் வைரலாகி வருகிறது.

Advertising
>
Advertising

மேலும், அவர்கள் ஆதிபராசக்தி தெய்வமாக பாவிக்கும் அந்த பெண்ணிற்கு, போஸ்டர்களையும் ஒட்டி, 'ஆதிபராசக்தி அவதரித்து விட்டார், பக்த கோடிகளே வாருங்கள்' என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், அந்த பெண்மணி இருக்கை ஒன்றில் அமர்ந்திருக்க, அவரது கழுத்தில் மாலைகள் அதிகம் போடப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட, கடவுளைப் போல அலங்கரிக்கப்பட்ட அந்த பெண்மணியை, பக்தர்கள் ஒவ்வொருவராக வந்து, காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று செல்கின்றனர். பதிலுக்கு, அந்த பெண்மணியும் பக்தர்களுக்கு அருள் பாவித்து, ஆசீர்வாதம் வழங்கி அனுப்புகிறார்.


அம்மன் கதாபாத்திரம்

முன்னதாக, புத்தம் புதிய பட்டு புடவை அணிந்து, சிறிது மேக் அப்புடன், திரைப்படத்தில் வரும் அம்மன் கதாபாத்திரம் போன்று, இந்த பெண்மணி காரில் இருந்து இறங்கி நடந்து வர, அவர் செல்லும் வழி எங்கும் மலரை போட்டுச் செல்கிறது பக்த கூட்டம். நடந்து வரும் போது, பேக் கிரவுண்டில் பக்தி பாடல்களும் ஒலிக்கின்றது.


அன்னபூரணி அம்மா

ஆனால், இவை அனைத்தையும் மிஞ்சும் படி, அவர் இருக்கையில் இருந்த போது, அங்கிருந்த பக்த பெருமக்களில் சில பெண்கள், பெண்மணியின் காலைப் பிடித்துக் கொண்டும், அதனை தலை மீது வைத்துக் கொண்டும், 'அம்மா, அம்மா' என கண்ணீர் விட்டு வழிபாடு வேற செய்கிறார்கள். இந்த வீடியோ அதிகம் பகிரப்பட்டு, பல விதமான கருத்துக்களையும் நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். நித்யானந்தாவிற்கு போட்டியாக ஒரு பெண் களமிறங்கி விட்டார் என்றும், பெண் நித்தியானந்தா என்றும் பலர் குறிப்பிட்டு வருகின்றனர். அன்னபூரணி அம்மா தான் இப்போதைக்கு இணையம் முழுக்க டிரெண்ட்.


கள்ளக்காதல்

திடீரென எந்தவித சம்மந்தமும் இல்லாமல், இந்த பெண்மணியின் வீடியோ வைரலான நிலையில், இவர் யார் என்பதையும் நெட்டிசன்கள் கண்டுபிடித்துள்ளனர். கடந்த 2012 ஆம் ஆண்டு, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த 'சொல்வதெல்லாம் உண்மை' நிகழ்ச்சியில் அரசு என்பவருடன் அன்னபூரணி கலந்து கொண்டுள்ளார். மறுபக்கம் அரசின் மனைவியும், அன்னபூரணியின் கணவரும் இருந்தனர். அரசுக்கும், அன்னபூரணிக்கும் தவறான உறவு ஏற்பட்டு இருவரும் தனியாக வசித்து வாழ்ந்துள்ளனர். இது இரண்டு குடும்பத்திற்கும் பிரச்சனை ஆகவே, நிகழ்ச்சி வரை இவர்களின் விவகாரம் சென்றுள்ளது.


ட்ரோல் அம்மா

மேலும், தான் அரசுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும், இதனால், தங்களுக்கு விவாகரத்து என்றும் அந்த நிகழ்ச்சியில் கோரிக்கை வைக்கின்றனர். கள்ளக்காதல் உறவு மூலம், கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு முன் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பங்குபெற்றிருந்த பெண்மணி, தற்போது திடீரென அம்மனாக அவதரித்ததை கேள்வி எழுப்பி  நெட்டிசன்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் . ட்ரோல் செய்யப்படும் அன்னப்பூரணி தான் சமூக வலைதளம் முழுக்க ஆக்கிரமித்துள்ளார்.

தடை விதித்த போலீஸ்

இதனிடையே, வரும் ஜனவரி மாதம் 1 ஆம் தேதியன்று, அன்னபூரணியின் அருள் வாக்கு நிகழ்ச்சி ஒன்று, செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருமண மண்டபம் ஒன்றில் வைத்து நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது, இதற்கு தடை விதித்துள்ள போலீஸ், அன்னபூரணியை தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.

AATHIPARASAKTHI, TRENDING, VIRAL, ஆதிபராசக்தி, பெண் தெய்வம்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்