'போடு ரகிட ரகிட ஊ...' '2 மணி நேரமா டயர்ட் ஆகாம குத்தாட்டம்...' 'புடிச்சா பாரு, இல்லன்னா போய்கிட்டே இரு...' - என்ன மேட்டரு...?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சேலம் மாவட்டம் ஜலகண்டாபுரம் சாலையில் எடப்பாடி காவல் நிலையம் அமைந்துள்ளது. எடப்பாடி காவல் நிலையம் வெளியே எப்போதும் போல பலர் புகார் அளிக்கவும், விசாரணைக்காகவும் வந்துள்ளனர்.

Advertising
>
Advertising

அந்த கும்பலில் சுமார் 35 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில் காவல் நிலையத்தில் இருந்த போலீசார் ஏற்கனவே புகார் அளிக்க வந்தவர்களுடன் பேசிக்கொண்டு அந்த பெண்ணை கண்டு கொள்ளாமல் இருந்துள்ளனர்.

இதனால் கடுப்பான அந்த பெண், திடீரென யாரும் எதிர்பாராத நிலையில் காவல் நிலைய வாசலில் குத்தாட்டம் போட்டு நடனம் ஆட தொடங்கியுள்ளார். அங்கிருந்த மக்கள் எல்லாம் அதிர்ச்சியடைந்து பார்க்கும் போது காவலர்களோ அப்போதும் அந்த பெண்ணை கண்டுக்கொள்ளவில்லை.

அங்கிருந்த ஒரு சிலர் அந்த பெண்ணிடம் சென்று, இது போலீஸ் நிலையம், இங்கு நடனம் ஆட கூடாது என சொல்லியும் 'ஆட்டம் புடிச்சா ஒரு ஓரமா நின்னு பாரு இல்லையென்றால் போய்க்கொண்டே இரு' என அந்த பெண்மணி கூறியுள்ளார்.

சுமார் தொடர்ந்து 2 மணி நேரத்திற்கு மேலாக திரைப்படத்தில் வரும் பல்வேறு பாடல்களைப் பாடியபடி, குத்தாட்டம் போட்டு ஆடிக்களைத்த பின் அங்கிருந்து புறப்பட்டு சென்றுள்ளார்.

இது குறித்து காவல் நிலையத்தில் கேட்டபோது, 'அந்தப் பெண் எடப்பாடி நகராட்சி உட்பட்ட கவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் என்றும், அடிக்கடி பிரச்சனை என கூறி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்க வருவதாகவும், அவரது பொய்யான புகாரை ஏற்காத பட்சத்தில் இவ்வாறு குத்தாட்டம் போட்டு போவார்' எனக் கூறினர்.

SALEM, EDAPPADI, DANCE, POLICE STATION

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்