பிரம்மாண்ட தேரை கீழே தள்ளிவிட்டு தாங்கிப் பிடிக்கும் கிராம மக்கள்.. 100 வருஷமா நடக்கும் வினோத திருவிழா..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தமிழகத்தில் அலங்கரிக்கப்பட்ட கோவில் தேரை கீழே தள்ளி அதனை தாங்கிப் பிடிக்கும் வினோத திருவிழா ஒன்று 100 வருடங்களாக நடைபெற்று வருகிறது.
திருவாரூர்
திருவாரூர் மாவட்டத்தில் உள்ளது தப்பலாங்குழியூர் கிராமம். இங்குள்ள பிரசித்திபெற்ற பிடாரி கொழுத்தாளம்மன் கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி 1 ஆம் தேதி தேர் திருவிழா நடைபெறுவது வழக்கம். தேர்த் திருவிழா என்றால் நாம் வழக்கமாக பார்ப்பதுபோல் அலங்கரிக்கப்பட்ட தேரை மக்கள் வடம் கொண்டு இழுப்பது அல்ல. இங்கே மனிதர்கள் தான் தேரை சுமந்து செல்கிறார்கள்.
10 கிராமங்கள்
திருவாரூர் மாவட்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த தேரோட்டத்தில் 10 கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொள்கிறார்கள். கோவிலில் இருந்து கிளம்பும் தேரை கிராம மக்களே சுமந்து செல்வர். ஒரு கட்டத்தில் அவர்களால் தேரை தூக்க முடியாமல் போகும்போது அப்படியே அதை கீழே தள்ளி விடுவர். தேர் விழும் பகுதியைச் சேர்ந்த கிராம மக்கள் அடுத்ததாக தேரை சுமக்க வேண்டும். இப்படி மூன்று நாள் தேரோட்டம் நடைபெற்ற பிறகு இறுதியாக கோவிலுக்கு அருகே ஒரு முறை தேர் கீழே தள்ளப்படும்.
கிடா வெட்டு
ஒவ்வொரு முறை தேர் கீழே விழும் போதும் அந்த இடத்தில் கிடா ஒன்றை பலி கொடுப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர் இந்த கிராம மக்கள். தேர் இறுதியாக கீழே விழும் இடத்தில் தேரின் இரு பக்கத்திலும் கிராம மக்கள் திரள்வர்.
யார் பக்கம் தேரை கீழே விழ வைப்பது என போட்டியே நடக்கும். இறுதியாக தேர் கீழே விழுந்ததும் காப்பு அறுக்கப்பட்டு பிடாரி கொழுத்தாளம்மனின் உற்சவ மூர்த்தியை கோவிலுக்கு உள்ளே பக்தர்கள் எடுத்துச் செல்வர்.
100 ஆண்டுகள்
100 ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த தேர் திருவிழாவில், 10 கிராம மக்களும் கலந்துகொள்ள வேண்டும் என்பது அப்பகுதியின் எழுதப்படாத சட்டமாக கருதப்படுகிறது. இந்த ஆண்டு திருவிழாவில் சுமார் 10 ஆயிரம் பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்துள்ளனர்.
இந்த தேர் திருவிழாவில் திருவாரூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகள் சுமார் 50 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
"எனக்கு போர்புரிய-லாம் தெரியாது.. என்னால முடிஞ்சது இதுதான்".. இணையவாசிகளை உருக வைத்த இளம்பெண்..!
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- பெண்கள் தான் டார்கெட்.. சொகுசு வாழ்க்கை.. என்கவுன்டர் செய்யப்பட்ட நீராவி முருகன் யார்?
- பக்காவான பிளான்.. 2.25 கோடி அபேஸ்.. ஸ்கெட்ச் போட்டுத் தூக்கிய போலீஸ்..சென்னையில் பரபரப்பு..!
- 21 வயதில் திருநங்கையாக மாறிய ஆண்… வீட்டுக்கு அழைத்து வந்து மஞ்சள் நீராட்டு விழா செய்த குடும்பத்தினர்!
- "அங்க சட்டை, வேட்டியெல்லாம் கிழியுது..".. ராகுல் காந்தி பேச்சுக்கு அண்ணாமலை பரபரப்பு பதில் பேச்சு..!
- தமிழகத்தின் 3-வது பெரிய கட்சியா பாஜக? - தேர்தல் முடிவுகள் சொல்வது என்ன?
- டிஎன்பிஎஸ்சி குரூப் 2, குரூப் 2ஏ, தேர்வு அறிவிப்பு வெளியீடு.. வயது, தகுதி , காலியிடங்கள் முழு விவரம்
- 328 பேரூராட்சிகளில் திமுக வெற்றி.. அதிமுக பிடித்த இடங்கள் எத்தனை?.. கவனம் ஈர்த்த சுயேட்சை வேட்பாளர்கள்!
- அதிமுக திமுக-வை வாஷ் அவுட் செய்த பாஜக! கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்த அசத்தல் சம்பவம்
- தேர்தல் முடிவுகள்: சுயேட்சைகள் கையில் சாயல்குடி பேரூராட்சி.. செல்வாக்கை இழந்த திமுக, அதிமுக
- பேரூராட்சி தேர்தல் முடிவுகள்: திமுகவுக்கு டஃப் கொடுக்கும் அதிமுக.. பரபரக்கும் கள நிலவரம்