நீயெல்லாம் என்ன எதுத்து பேசுறியா?..தீண்டாமையால்.. சக மாணவனின் முதுகை பிளேடால் கிழித்த மாணவன்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பள்ளியில் படிக்கும் சக மாணவனின் முதுகை மாணவன் பிளேடால் கிழித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே பாலமேடு அரசு மேல்நிலைப்பள்ளியில் சரவணக்குமார் என்னும் மாணவன் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். இவரின் சக மாணவன் மகேஷ்வரன் என்பவர் இவரது பையை எடுத்து ஒளித்து, வைத்து விளையாடியுள்ளார்.
இது தெரிந்து, ஏன் பையை ஒளித்து வைத்தாய்? என்று மகேஷ்வரனிடம், சரவணக்குமார் கேட்டிருக்கிறார். அதற்கு சரவணக்குமாரை சாதிப்பெயரை சொல்லி அசிங்கமாகத் திட்டிய மகேஸ்வரன், நீயெல்லாம் என்னைப் பார்த்து பேச வந்துட்டியா? என்று கூறியபடியே திடீரென்று பென்சில் டப்பாவிலிருந்து பிளேடை எடுத்து சரவணகுமாரின் முதுகில் கிழித்துவிட்டு அங்கிருந்து ஓடிவிட்டார்.
வலி பொறுக்க முடியாமல் சரவணக்குமார் அலற சக மாணவர்களும், ஆசிரியர்களும் ஓடிவந்து அவரைக் காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தற்போது சரவணக்குமார் முதுகில் ஏகப்பட்ட தையல்கள் போடப்பட்டுள்ளது. காவல்துறை இந்த சம்பவம் குறித்து தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘எவ்வளோ சொல்லிப் பார்த்தும் கேட்கல’... 'காதல் மனைவிக்கு'... 'கணவரால் நேர்ந்த கொடூரம்'!
- 'பண்டிகை'யை கொண்டாடுங்க... தீபாவளிக்கு.. ஒருநாள் 'எக்ஸ்டிரா' லீவ்!
- 'லேப்டாப்' ஏன் தரல?.. கேள்வி கேட்ட 'மாணவனுக்கு'.. ஆசிரியரால் 'நடந்த' கொடூரம்!
- Watch Video: மொத 'பரிசு' யாருக்கு?.. குழம்பும் நெட்டிசன்கள்.. பதில் தெரிஞ்சா சொல்லுங்க!
- 'ஹாப்பி பர்த்டே பாண்டியன் எக்ஸ்பிரஸ்'...'எங்க மனசுக்கு ரொம்ப நெருக்கம்'... நெகிழ்ச்சியில் பயணிகள்!
- 'என்ன? 2 ஆயிரம் ரூபாய் கூட இல்லயா? 14 வயது சிறுமியை பலாத்காரம் செய்துவிட்டு நண்பனிடம் அனுப்பிவைத்த பள்ளிச் சிறுவர்கள்!'
- பத்து லட்சம் கடன்...அரசுக்கு கடிதம் எழுதிட்டு.. வெஷத்தை குடிச்ச இளைஞர்!
- “மாணவிகள்.. பெற்றோர்.. ஆசிரியர்கள்.. அத்தன பேரயும் ‘அந்த மாதிரி’ மார்ஃபிங் பண்ணியிருக்கேன்.. எவ்ளோ தருவீங்க?”.. 'மிரளவைத்த' பெண்!
- 'கம்ப்ளைண்ட்டா குடுக்குற?'.. '12 ஆசிரியர்கள்.. 10 மாணவர்கள் சேர்ந்து'.. சென்னையில் +1 மாணவிக்கு நேர்ந்த கொடுமை'!
- 'நாங்க சொல்ற இடத்துக்கு வந்தா'... 'தனிமையில இருக்கலாம்'...'ஆப் மூலம் மொபைலுக்கு வந்த மெசேஜ்'!