தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் பாதுகாப்பிற்காக.. இஸ்ரேல் தயாரித்துள்ள அதிநவீன `எக்ஸ் 95’ துப்பாக்கி.. என்ன ஸ்பெஷல்?

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கடந்த 2020-ஆம் ஆண்டு ஜனவரியில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு அதுவரை வழங்கப்பட்டு வந்த `இசட்’ பிரிவு பாதுகாப்பை மத்திய அரசு விலக்கிக் கொண்டது. அதேப்போன்று, அப்போது துணை முதல்வராக இருந்த ஓ.பன்னீர்செல்வத்துக்கும் `ஒய்’ பிரிவு பாதுகாப்பையும் விலக்கிக் கொண்டது.

Advertising
>
Advertising

என்ன ஜெயிக்க வச்சீங்கன்னா ஒரு கோடி கொசுக்களை கொல்லுவேன், அதுமட்டுமல்ல.. கையில் எலியுடன் வாக்கு சேகரிக்கும் சுயேட்சை வேட்பாளர்

`இசட் ப்ளஸ்’ பாதுகாப்பு:

இந்நிலையில், கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக வெற்றிபெற்று தமிழக முதல்வர் ஆனார். அதையடுத்து, அவருக்கு `இசட் ப்ளஸ்’ பாதுகாப்பை மத்திய உள்துறை அமைச்சகம் அளித்தது. இதேபோல், தமிழக போலீஸுலும் முதல்வர் பாதுகாப்புக்கு என்று தனிப் பிரிவு உண்டு. இந்த பிரிவை எஸ்.பி அந்தஸ்தில் அதிகாரி ஒருவர் கவனித்துக் கொள்கிறார். இவருக்கு அடுத்தபடியாக, இரண்டு டி.எஸ்.பி-கள் உள்ளனர். இவர்கள் கண்காணிப்பில் துப்பாக்கி ஏந்திய வீரர்கள் உள்ளார்கள்.

`எக்ஸ் 95’ ரக துப்பாக்கி வீரர்களை கூடுதலாக நியமனம் :

எப்போதும் முதல்வர் வீட்டில் இருந்து கிளம்புகிறார் என்றால், மூன்று வழிகள் முதலில் தேர்தெடுக்கப்படும். கான்வாய் கிளம்பும்போது, பாதுகாப்புப்பிரிவு எஸ்.பி தான் எந்த பாதையில் முதல்வர் கார் போக வேண்டும் என்பதை தீர்மானித்து உறுதிப் படுத்துவார். முதல்வர் காருடன் கான்வாய் போகும்போது எந்த வேகத்தில் போகவேண்டும் என்பதையும் இவர்தான் தொடர்ந்து கண்காணித்த வண்ணம் இருப்பார். இந்த நிலையில், கடந்த 20-ம் தேதியில் முதல்வர் பாதுகாப்பு பிரிவில் `எக்ஸ் 95’ ரக துப்பாக்கி வீரர்களை கூடுதலாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

உலக தரத்தில் துப்பாக்கி:

`எக்ஸ் 95’ ரக துப்பாக்கிகள் குறித்து உயர் அதிகாரிகள் கூறும்போது. `'முக்கிய தலைவர்களுக்கு தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக, புதிதாக வரும் அதிநவீன துப்பாக்கிகளை வாங்கி பாதுகாப்பு வீரர்களுக்கு கொடுப்பது வாடிக்கை. இந்தியாவில் துணை நிலை ராணுவப்படையினரிடம் `எக்ஸ் 95’ ரக துப்பாக்கிகள் உள்ளன. உலக தரத்துக்கு தகுந்தமாதிரி பாதுகாப்பு அம்சங்களை நவீனப் படுத்திக்கொண்டு இருக்க வேண்டும். எனவே தான், தமிழக முதல்வருக்கும் இந்த நவீன வகை துப்பாக்கியை கையாளும் வகையில் வீரர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

அதிநவீன வசதிகள்:

இந்த நவீன எக்ஸ்-95 ரக துப்பாக்கியால் எந்த இலக்கையும் படு துல்லியமாக குறிபார்த்து சுடலாம். இந்த துப்பாக்கி இஸ்ரேல் நாட்டில் தயாரித்தது ஆகும். நிமிடத்துக்கு 750-950 ரவுண்ட்ஸ் சுடக்கூடியது. இதில், அதிவேகத்தில் செல்லும் வாகனங்களில் இருந்தபடியே இலக்கை நோக்கி மிகவும் துல்லியமாகசுடலாம். ஏராளமான அதிநவீன வசதிகள் உள்ளது'' என தெரிவித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் 'எந்த ரக அதிநவீன துப்பாக்கி என்றாலும், ஆட்டோமெட்டிக் ஆக்ஷன், செமி ஆட்டோமெட்டிக் ஆக்ஷன், சிங்கிள் ஆக்ஷன், என மூன்று முறைகளில் சுடுவதற்கான வசதி உண்டு. சூழலுக்கு ஏற்றது போல் துப்பாக்கியை வைத்திருக்கும் வீரர் முறைகளை மாற்றி டிரிகரை இயக்குவார். இதற்காகநீண்ட கால பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது'' என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

அரசன் போல வாழ்க்கை.. 9 வயசுலையே கெத்து காட்டுறாரு.. உலகமே வியந்து பார்க்கும் நைஜீரிய சிறுவன்

SOLDIER, X95 RIFLE, PROTECTION, TN, CM STALIN, எக்ஸ் 95, இசட் ப்ளஸ், முதல்வர் மு.க ஸ்டாலின்

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்