சின்ன 'குழந்தை' அவன்...! என்ன விட்டுட்டு போய்ட்டான்... கண்கலங்க வைக்கும் முதியவரின் காளைப் பாசம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வடக்குத் தெருவைச் சேர்ந்த விவசாயி இடமலையான். 90 வயது முதியவரான இவர், 20 வருடங்களுக்கு முன்பு, மாயாவு என்ற ஜல்லிக்கட்டுக் காளையைத் தனது சொந்தப் பிள்ளையைப் போல வளர்த்து வந்தார். சுற்றுப்புற பகுதியில் நடக்கும் பல ஜல்லிக்கட்டு விழாக்களுக்கும் மாயாவுவை அழைத்துச்சென்று போட்டியில் பங்கேற்கச் செய்தார். பார்ப்பதற்கு முரடன் தோற்றத்தில் இருந்தாலும் மாயாவு, இடமலையான் சொல்லுக்குக் கட்டுப்படும் சிறு குழந்தையாகவே இருந்துள்ளான். இதனால் மாயாவு மேல் அதிக பாசம் கொண்ட இடமலையான், மாயாவுவை விட்டுப் பிரிவதில்லை. இந்நிலையில், 15 வருடங்களுக்கு முன்பு மாயாவு திடீரென இறந்துவிடவே, இடமலையான் துடித்துப்போனார். மாயாவு காளையின் உடலை தனது தோட்டத்தில் அடக்கம் செய்தார்.
பிறகு, மாயாவு நினைவாக ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்குச் சென்று மாலை அணிவித்து, கண்ணீர் அஞ்சலி செலுத்தி, தெய்வத்தைப் போல் வணங்கிவருகிறார். அவரோடு அவரது மகன்கள் மற்றும் பேரப் பிள்ளைகள் அனைவரும் மாயாவுக்கு அஞ்சலிசெலுத்துகின்றனர்.
நேற்றும் மாட்டுப் பொங்கலை அடுத்து மாயாவுக்கு அஞ்சலி செலுத்தினார், விவசாயி இடமலையான். மாயாவுவைப் பிரிந்த இடமலையான், அதற்கு பிறகு வேறு எந்தக் காளையையும் வளர்க்க வில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 90 வயது முதியவர் காளைமீது கொண்ட பாசம் பலரையும் கண்கலங்க வைத்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'ஆந்தையுடன் கமிட் ஆன கிளி!'... 'காதல் மோகத்தில் டூயட்'...
- சொந்தக்காரங்க எவ்வளவோ சொல்லியும்... அழுதபடியே இருந்தார்.... 73 வருட காதல் கணவர் செய்த காரியம்... !
- ‘தோட்டத்தில்’ தூங்கிக் கொண்டிருந்த... ‘இளைஞர்களுக்கு’ நடந்த ‘நடுங்க’ வைக்கும் சம்பவம்... ‘சிக்கிய’ 6 பேர்... வெளியான ‘அதிர்ச்சி’ காரணம்...
- உங்க 'பொண்ண' மட்டும் எனக்கு கட்டி வைக்கலன்னா... 'தாய்' பணிபுரியும் இடத்திற்கு சென்று... கோவையில் நடந்த சம்பவம்...!
- 'யாரெல்லாம் 'அப்பா'வ ரொம்ப மிஸ் பண்றீங்க'?... 'நெகிழ வைத்த தந்தை'... மனதை உருக்கும் வீடியோ!
- ‘பேஸ்புக் மூலம் காதல்’.. கனடா பெண்ணுக்கும் இந்திய பையனுக்கு கொடைக்கானலில் நடந்த கல்யாணம்..!
- 'வயசானாலும் அவங்க 'lovers' தான்'... 'ஐயோ யாரு கண்ணு பட்டுச்சு'... நெஞ்சை உருக்கும் சம்பவம்!
- 'காதலில் ஊடலா? நீங்கள் செய்ய வேண்டியவை, செய்யக்கூடாதவை'
- 'உன்ன எனக்கு பிடிக்கல' என்றாள்.. 'கொன்று' உடலை 'டீ' தோட்டத்தில் வீசிவிட்டு வந்தேன் .. அதிரவைக்கும் பரபரப்பு சம்பவம்..!
- ‘திடீரென’ கேட்ட ‘அலறல்’ சத்தம்... ஓடிச் சென்று பார்த்தவர்களுக்கு காத்திருந்த ‘பேரதிர்ச்சி’... ‘நடுங்கவைக்கும்’ சம்பவம்...