‘தமிழகத்தில்’ பெரிய அளவில் தெரியும்... ‘அபூர்வ’ சூரிய கிரகணம்... 10 மாவட்டங்களில் முழுமையா பார்க்கலாம்... எங்கெல்லாம் தெரியுமா?
முகப்பு > செய்திகள் > தமிழகம்2019-ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணம், வரும் வியாழக்கிழமை அன்று, தமிழகம், கேரளா, கர்நாடாக ஆகிய மாநிலங்களில் பெரிய அளவில் தெரியும் என்று கூறப்பட்டுள்ளது.
பூமிக்கும் (Earth), சூரியனுக்கும் (Sun) இடையே ஒரே நேர்கோட்டில் நிலவு (Moon) வரும்போது, அதன் நிழல் பூமியின் மீது விழும். அப்போது, பூமியில் இருந்து பார்க்கும்போது, சூரியனை நிலவு மறைத்த காட்சி தென்படும். இதில் சூரியனை முழுவதுமாக நிலவு மறைத்தால், அதுதான் முழு சூரிய கிரகணம். அதுவே, சூரியனின் மையப் பகுதி (centre) மட்டும் நிலவால் மறைக்கப்பட்டு, சூரியனின் விளிம்பு பிரகாசிப்பது, வளைய சூரிய கிரகணம் (Ring of Fire) அல்லது கங்கண சூரியகிரகணம் என அழைக்கப்படுகிறது.
இந்த வகையில் இன்னும் சில நாட்களில் 2020-ம் ஆண்டு தொடங்கப் போகிறது. இந்நிலையில், இந்த ஆண்டின் கடைசி சூரிய கிரகணம் வரும் 26-ம் தேதி, அதாவது நாளை மறுநாள் வியாழக்கிழமை அன்று நிகழ்கிறது. அபூர்வமாகக் காணப்படும் வளைய சூரியக் கிரகணமாக உள்ள இந்த சூரியக் கிரகணம் மத்திய கிழக்கு மற்றும் ஆசியா நாடுகளில் மிக நன்றாக காணப்படும். அந்த வகையில் தமிழகத்தில், மிகப் பெரிய அளவில் 10 இடங்களில் தெரியும். காலை 8.04 மணி முதல் சுமார் 3 மணிநேரம் 30 நிமிடங்கள் சூரிய கிரகணம் நீடிக்கிறது.
அதில் சூரியன் மற்றும் நிலவின் நெருப்பு வளையம், காலை 9.35 மணிக்கு சுமார் 2 நிமிடங்கள் நீடிக்கும். நாசாவின் வரைபடத்தின் அடிப்படையில், நிகழும் கிரகணம் கோயம்புத்தூரில் முதலில் தெரியும். தொடர்ந்து புதுக்கோட்டை, ஈரோடு, திருச்சி, நீலகிரி, திருப்பூர், கரூர், திண்டுக்கல், சிவகங்கை மற்றும் மதுரை ஆகிய 10 மாவட்டங்களில் சூரியக் கிரகணம் முழுமையாக தெரியும். சென்னை உள்பட மற்ற இடங்களில் பகுதி சூரியக் கிரகணத்தை பார்க்கலாம். இந்த சூரியக் கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்கக்கூடாது. அதற்கென்று இருக்கும் கண்ணாடி வழியாக தான் பார்க்க வேண்டும்.
அதற்காக தமிழகத்தில் முழு சூரியக் கிரகணம் தெரியும் 10 இடங்களிலும், பகுதியாக தெரியும் சென்னையிலும் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்காக விஞ்ஞான் பிரச்சார், அறிவியல் பலகை, கணித அறிவியல் நிறுவனம், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மையம் ஆகியவற்றின் மூலம் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு 2031-ம் ஆண்டு தான் தமிழகத்தில் மதுரை மற்றும் தேனியிலும் சூரிய கிரகணத்தை பார்க்க முடியும். கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி வருவதால், இது கிறிஸ்துமஸ் சூரியக் கிரகணம் என்றும் அழைக்கப்படுகிறது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- ‘1 லட்சத்துக்கும் அதிகமான பைக்தான் டார்கெட்’!.. ‘ஹெல்மெட்டோட தான் வருவாங்க’.. சென்னையை அதிரவைத்த கொள்ளையர்கள்..!
- 'எமனாக வந்த ஊஞ்சல்'...'கழுத்தை சுற்றிய நைலான்'...'பெற்றோர் முன்பு சென்னையில்' நடந்த கோரம்!
- ஒருத்தரை ஒருத்தர் காப்பாற்றப்போய்... தாய், மகன், பேரனுக்கு... அடுத்தடுத்து நடந்த சோகம்... பதறிப்போன மக்கள்!
- 'மின்சார ரயில்களில் அதிரடி ஆஃபர்'...'ஒரே ஒரு பாஸ் மட்டும் போதும்'...மகிழ்ச்சியில் 'சென்னை மக்கள்'!
- இந்த மாவட்டங்களில் எல்லாம்... கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!
- ‘தாத்தா’ எப்டி இருக்கீங்க... ‘அன்பாக’ பேசிய மர்மநபர்... ‘பைக்கில்’ கூட்டிட்டுப் போய் செய்த காரியம்... ‘சென்னை’ முதியவருக்கு நேர்ந்த பரிதாபம்!
- ‘கணவர்’ கண்முன்னே... நொடியில் ‘சென்னை’ பெண்ணுக்கு நடந்த ‘கோர’ விபத்து... ‘பதறவைக்கும்’ வீடியோ...
- ‘வேண்டாம்னு சொன்னேன்’!.. ‘கேட்கல’!.. சென்னையில் திருமணமான 4 மாதத்தில் இளம்பெண்ணுக்கு நடந்த சோகம்..!
- 'எங்கடா இங்க இருந்த கோயில காணோம்?'.. குழம்பிய பக்தர்கள்.. 'சிசிடிவி காட்சிகளில்' காத்திருந்த அதிர்ச்சி!
- அடுத்த 24 மணிநேரத்தில்... 4 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு... வானிலை மையம் தகவல்!