'கொரோனா வைரஸ்லாம் ஒண்ணும் வராது, வாங்க...' '3 கிலோ வெறும் 99 ரூபாய் தான், கூடவே சிக்கன் வறுவல் இலவசம்...' விழிப்புணர்வை உண்டாக்கும் சிக்கன் கடைக்காரர்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கோழி கறி சாப்பிட்டால் வைரஸ் தாக்கும் என்று பரவிய வதந்தியை நீக்க நாமக்கல் மாவட்டத்தில் 3 கிலோ கோழிக்கறியை 99 ரூபாய்க்கு விற்று விழிப்புணர்வு ஏற்படுத்திய நபரை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

தற்போது இந்தியாவில் பரவி வரும் கொரோனோ வைரஸ்க்கு இதுவரை சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்து உள்ளனர். மேலும் உலகம் முழுவதும் 7173 பேர் இறந்துள்ளனர் என்றும், 182716 பேர் கொரோனோ வைரசால் பாதிப்படைந்துள்ளனர். மேலும் 79883 பேர் கொரோனோ வைரஸ் பாதிப்பிலிருந்து வெளிவந்துள்ளனர்.

கொரோனோ வைரஸ் வரவுவதை விட அதைப் பற்றிய வதந்திகள் வாட்ஸ் அப்களிலும், முகநூல் மற்றும் சமுக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. கோழி கறி சாப்பிட்டால் கொரோனோ வைரஸ் பரவும் என்றும் வதந்தி பரவி வருகிறது.

இதனால் கோழி கறி மற்றும் முட்டை வியாபாரம் கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனைப் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்  நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில், கோ‌ழிக்கறி வியாபாரிகள் சிக்கன் வறுவலை பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கினர். அத்துடன் 3 கிலோ கோழிக்கறியை 99 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார்.

CHICKEN, CORONAVIRUS

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்