‘நவம்பர் 29-ல் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை’... ‘இந்தப் பகுதியை நோக்கி நகர வாய்ப்பு’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
முகப்பு > செய்திகள் > தமிழகம்தெற்கு வங்கக் கடலில் நவம்பர் 29-ல் உருவாக உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலை, தென் தமிழகத்தை நோக்கி நகர வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
வங்கக் கடலில் அண்மையில் உருவான நிவர் புயல் இன்று அதிகாலை 2.30 மணிக்கு புதுவை மரக்காணம் இடையே கரையை கடந்தது. இந்த புயல் கரையை கடக்கும் போது வீசிய பலத்த காற்றால், புதுச்சேரி மற்றும் வட தமிழக மாவட்டங்களான கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த சேதம் ஏற்பட்டது.
நிவர் புயல் கரையை கடந்து சென்ற சுவடு கூட இன்னும் மறையாத நிலையில், வங்கக்கடலில் தென்கிழக்கு பகுதியில், மீண்டும் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி, வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று உருவாக உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாக உருவெடுக்க வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் நாட்களில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகர்ந்து, தென் தமிழகம் நோக்கி வரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு வங்க கடலில் புயல் உருவானாலும் இந்த புயல் எந்த திசையை நோக்கி நகரும் என்பதை பொறுத்துதான் தமிழகத்தில் தீவிர மழை பெய்யுமா அல்லது ஆந்திரா, ஒடிசாவில் அதிக மழை பெய்யுமா என்பது தெரியும் என்றும் வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- வெளுத்து கட்டிய நிவர் புயல்!.. 2000 வீடுகளில் புகுந்த மழைநீர்!.. சிக்கித் தவிக்கும் பொதுமக்கள்!
- 'ஒரு மெரட்டு மெரட்டிய நிவர் புயல்'.. “அடுத்து எந்த திசையை நோக்கி திரும்பியது?” - வானிலை மையம் அறிவித்த பரபரப்பு தகவல்கள்!
- ‘நிவர் புயல் கரையை கடந்தாலும்’... ‘இந்த 4 மாவட்டங்களில் அதிக கனமழை பெய்யும்’... ‘வானிலை ஆய்வு மையம் தகவல்’...!!!
- “மனிதாபிமானமே இல்லாம... புயல் நேரத்துலயா இப்படி பண்ணுவீங்க!”... நிவருக்கு பயந்து உறவினர் வீட்டுக்கு தூங்கச் சென்ற நேரம் பார்த்து.. வீட்டை குறிவைத்து மர்ம கும்பல் செய்த ‘பரபரப்பு’ சம்பவம்!
- ‘5 வருசத்துல 3 முறை வெள்ளம்’.. 2 நாளா வெளுத்து வாங்கிய மழை.. தரைத்தளம் வரை சூழ்ந்த மழைநீர்..!
- 'இன்னும் கொஞ்சம் நேரத்துல...' 'நிவர்' புயல் கரையை கடக்க போகுது...! - சரியா எந்த இடத்துல கடக்குது...?
- ‘நிவர் புயலுக்கு கண் பகுதி உருவாகாது’... 'என்ன காரணம்’... ‘ஆனாலும்’... ‘வானிலை மையம் எச்சரிக்கை’...!!!
- ‘நிவர் புயலால் பாதிக்கப்பட்டவர்கள்’... 'அவசர கால உதவி எண்ணான’... ‘இந்த நம்பரையும் பொதுமக்கள் பயன்படுத்தலாம்’... வெளியான அறிவிப்பு...!!!
- அச்சுறுத்தும் நிவர்!.. வெளிமாவட்ட மக்களுக்கு 'நோ என்ட்ரி' போட்ட சென்னை காவல்துறை!.. பிரதான சாலைகள் மூடல்!.. அதிரடி அறிவிப்பு!
- 'தொடர் மழை, செம்பரம்பாக்கம் ஏரி திறப்பால்'... '21 பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!!'...