Video: ‘புதரில் இருந்து வந்து’... ‘திடீரென கழுத்தை சுற்றிய மலைப்பாம்பு’... ‘பதறிப்போன தொழிலாளர்கள்’!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

புதர்களை அகற்றும் வேலையில் இறங்கியபோது, தொழிலாளர் ஒருவரின் கழுத்தை மலைப்பாம்பு நெருக்கிய சம்பவம் பதறவைத்துள்ளது.

தமிழக-கேரள எல்லையான நெய்யாறு அணைப்பகுதியில், நூறு நாள் வேலை திட்டத்தின் கீழ், புதர்களை அகற்றும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கள்ளிக்காட்டைச் சேர்ந்த புவனச்சந்திரன் என்பவரும் புதரை அகற்றிக் கொண்டிருந்தார். திடீரென அப்பகுதியில் வந்த மலைப்பாம்பு ஒன்று அவரின் கழுத்தை சுற்றி வளைத்து, நெறுக்கியது.

மலைப்பாம்பு கழுத்தை இறுக்கியதால், அலறித்துடித்தார் புவனச்சந்திரன்.  இதனால் செய்வதறியாது தவித்துப்போன, சக பணியாளர்கள், சுதாரித்துக்கொண்டனர். பின்னர் விரைந்து, அவரது கழுத்திலிருந்த மலைப் பாம்பை அகற்றினர். அந்த மலைப்பாம்பு பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, அடர்ந்த வனப்பகுதியில் கொண்டுபோய் விடப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PYTHON, TN, KERALA

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்