ஓடும் ரயிலில் ஜன்னலில் தொங்கியபடி செல்போன் பறிக்க முயன்ற வாலிபர்.. அடுத்த வினாடி கேட்ட அலறல் சத்தம்.. பதறிப்போன பயணிகள்..!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் ஓடும் ரயிலில் செல்போன் பறிக்க முயன்ற இளைஞர் ஒருவர் தவறி கீழே விழுந்து காயமடைந்த சம்பவம் பயணிகளை திடுக்கிட செய்திருக்கிறது.

Advertising
>
Advertising

Also Read | ஏர்போர்ட்டில் வைத்து கைது செய்யப்பட்ட கிரிக்கெட் வீரர்.. அதுக்கு முன்னாடி அவர் போட்ட உருக்கமான போஸ்ட்.. முழு விபரம்..!

செல்போன் திருட்டு

சென்னை சென்டரல் ரயில் நிலையத்தில் இருந்து கும்மிடிப்பூண்டி வரை செல்லும் மின்சார ரயிலில் பயணிக்கும் மக்களிடம்  இருந்து மர்ம நபர்கள் செல்போன்களை பறித்துச் செல்வது தொடர்ந்து நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது. ரயில்களில் குறிப்பாக ஜன்னல் ஓரத்தில் அமர்ந்திருக்கும் பயணிகளை குறிவைத்து இந்த கும்பல் செயல்பட்டு வருகிறது. பயணிகள் அசந்த நேரம் பார்த்து, அவர்களிடம் இருந்து செல்போன் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை மர்ம நபர்கள் திருடிச் செல்கின்றனர். பயணிகள் கீழே இறங்கி செல்வதற்குள் இந்த திருட்டு கும்பல் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விடுகின்றனர்.

அதிர்ச்சி

இந்நிலையில் நேற்று காலை சென்னை கொருக்குப்பேட்டை அருகே எலெக்ட்ரிக் பேருந்தில் பயணித்த ஓவரிடம் இருந்து செல்போனை பறிக்க முயற்சி செய்திருக்கிறார் இளைஞர் ஒருவர். அப்போது அவர் தடுமாறி கீழே விழுந்ததில் அவரது இரு கால்களிலும் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. மேலும், அவரது இடது கால் முறிந்திருக்கிறது. இதனால் அதிச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல்கொடுத்திருக்கின்றனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ரயில்வே காவல்துறையினர் அந்த இளைஞரை மீட்டு சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர்.

சிகிச்சை

அப்போது அவரிடத்தில் நடத்தப்பட்ட விசாரணையில் அவர் வண்ணாரப்பேட்டை பென்சில் பேட்டரி சீனிவாசபுரம் பகுதியை சேர்ந்த நவீன் (எ) அட்டை நவீன் என்பது தெரிய வந்திருக்கிறது. இவர் மீது ஏற்கனவே திருட்டு உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. ஓடும் ரயிலில் தொங்கியபடி பயணி ஒருவரிடம் இருந்து செல்போனை பறிக்க முயன்றிருக்கிறார் நவீன்.

அப்போது எதிர்பாராத விதமாக அவர் கீழே விழ, அவர் கால் மீது ரயில் ஏறியிருக்கிறது. இந்நிலையில் ஸ்டான்லி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் நவீன் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவருகிறார். இந்த சம்பவம் சென்னை முழுவதும் பரபரப்புடன் பேசப்பட்டு வருகிறது.

Also Read | இலக்கியத்துக்கான நோபல் பரிசு.. உலகத்தை தன் எழுத்தால் அசைத்துப் பார்த்த அனி எர்னாக்ஸ்.. யாருப்பா இவங்க..!

MAN, STEAL, STEAL CELLPHONE, TRAIN

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்