'நான் நெறைய கண்டுபிடிச்சுருக்கேன்...' 'என்னோட ப்ராஜெக்ட்ஸ் திருடுறதுக்குன்னே ஒரு க்ரூப் சுத்துது...' 'டக்குன்னு டென்ஷனாகி சைக்கிள் செயினை எடுத்து...' கலெக்டர் அலுவலகத்தில் நடந்த களேபரம்...!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுக்க வந்தவர் திடீரென சைக்கிள் செயினை எடுத்து கண்ணாடிகளை உடைத்து களேபரம் உண்டாக்க அருகிலிருந்தவர்கள் தெறித்து ஓடியிருக்கின்றனர்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு இளைஞர் ஒருவர் மனு கொடுக்க வந்திருக்கிறார். சாதாரண பொதுமக்களைப் போல இயல்பாக இருந்த அந்த இளைஞர், ஆட்சியர் அலுவலக வளாகத்தினுள் நுழைந்த சில நிமிடங்களிலேயே மறைத்துக் கொண்டுவந்திருந்த சைக்கிள் செயின் மற்றும் கத்தியை எடுத்து அங்கிருந்த கார் கண்ணாடியை உடைத்திருக்கிறார். மீண்டும் வெறியாகி கலெக்டர் அலுவலக வரவேற்பறைக்குச் சென்ற அந்த இளைஞர், அங்கிருந்த கண்ணாடி கேபினை சைக்கிள் செயினால் அடித்து நொறுக்கியிருக்கிறார். மேலும், தடுக்கச் சென்ற பாதுகாப்புப் பணியில் இருந்த பெண் காவலரையும் தாக்கியிருக்கிறார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த உடனே விரைந்து வந்த போலீஸார், பொதுமக்கள் உதவியுடன் அந்த இளைஞரை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணையில் அவர் திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோ என்பதும், அவருடைய நடவடிக்கைகள் மனநலம் பாதிக்கப்பட்டவர் போல இருப்பதும் போலீசாருக்குத் தெரியவந்தது.

மூன்றாம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ள அந்த இளைஞர், பெயின்டராக வேலை பார்த்து வந்திருக்கிறார். வேலைக்குச் சென்றாலும், அவர் ஒரு மனநலம் பாதிக்கப் பட்டவர் போலவே இருந்திருக்கிறார். சாதாரண நேரங்களிலும் தனக்குத்தானே, தான் நிறைய கண்டுபிடிப்புகள் கண்டுபிடிப்புகள் கண்டுபிடித்துள்ளதாகவும், நிறைய புராஜெக்ட்ஸ் வைத்துள்ளதாகவும் கூறுவார். மேலும் அதை திருடுறதுக்கு ஒரு குரூப் வேலை செய்துக்கொண்டு இருக்கிறார்கள் என சம்பந்தமே இல்லாமல் மாறி மாறிப் பேசியுள்ளார். உடலின் பல இடங்களில் டாட்டூக்களை வரைந்திருக்கிறார். எதற்காக கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைந்தார் என்ற கேள்விக்கு அவர் பதிலளிக்கவில்லை. தற்போது காவல்நிலையத்தில் வைத்து போலீசார் அந்த நபரை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.

COLLECTOROFFICE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்