பிசியாக இருந்த மனைவியின் செல்ஃபோன்... கேள்வி கேட்ட கணவனுடன் தகராறு.. கத்திரிகோலை எடுத்து கணவன் செய்த வெறிச் செயல்...
முகப்பு > செய்திகள் > தமிழகம்தஞ்சை மாவட்டம் ஒருத்த நாடு அருகே குடும்ப தகராறு காரணமாக காதல் மனைவியை கத்திரிக்கோலால் குத்திக் கொன்ற கணவனை போலீசார் தேடி வருகின்றனர்.
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள ஆம்பலாப்பட்டு வடக்கு கிராமத்தை சேர்ந்தவர் இளையராஜா. இவருக்கும் இவருடைய மனைவி சங்கீதாவுக்கும் 17 வயதில் ஒரு மகனும், 14 வயதில் ஒரு மகளும் உள்ளனர். இளையராஜா சென்னையில் தங்கி வேலை பார்த்து வந்தார். சங்கீதா தனது தாய் வீட்டில் மகன்-மகளுடன் வசித்து வந்தார்.
இளையராஜாவுக்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த இளையராஜா தனது மனைவி சங்கீதாவை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது சங்கீதாவின் செல்போன் எண் பிசியாக இருந்ததாக கூறப்படுகிறது. இதனால் சந்தேகமடைந்த இளையராஜா சிறிது நேரத்துக்கு பின்னர் மீண்டும் தனது மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டார். அப்போது கணவன்-மனைவி இடையே செல்போனில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த இளையராஜா, சென்னையிலிருந்து கிளம்பி சொந்த ஊருக்கு சென்றார். நேற்று முன்தினம் மாலை தனது மாமியார் வீட்டுக்கு சென்ற அவர், தனது மனைவி சங்கீதாவிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அப்போது அவர்கள் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த இளையராஜா அருகிலிருந்த கத்திரிக்கோலை எடுத்து தனது மனைவியை குத்திக் கொன்றதாகத் தெரிகிறது. இதில் படுகாயமடைந்த சங்கீதாவை அக்கம்பக்கத்தினர் காப்பாற்றி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து பாப்பாநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளையராஜாவை வலைவீசி தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
'பேபி உன்ன மிஸ் பண்றேன்'...'செல்ஃபி அனுப்பு'... 'அலறிய இளம் பெண்'... சென்னை வாலிபர் செய்த அட்டகாசம்!
தொடர்புடைய செய்திகள்
- இனி பேசி பிரயோஜனமில்லை என்ற முடிவுக்கு வந்த தந்தை... பெற்ற மகன் என்றும் பாராமல்... ஆத்திரத்தில் செய்த வெறிச் செயல்...
- 'இது என்னோட குழந்தை இல்ல'... 'தாய் செய்த அதிர்ச்சிக் காரியம்'... 'கடைசியில் நடந்த பயங்கரம்'!
- ‘கவலையின்றி’ இருந்த தாய்... ‘சந்தேகத்தில்’ விசாரித்தபோது வெளியான ‘திடுக்கிடும்’ தகவல்கள்... ‘சென்னையில்’ வளர்ப்பு மகனுக்கு நேர்ந்த ‘கொடூரம்’...
- ‘2 தடவ மதுவில் விஷம் கலந்தும் சாகல’.. ‘அதான்..!’.. கணவனை கொலை செய்த மனைவியின் பகீர் வாக்குமூலம்..!
- ‘நள்ளிரவில் காவல்துறை உதவி ஆய்வாளருக்கு நேர்ந்த பயங்கரம்’.. மெட்ரோ சிட்டியை நடுங்க வைத்த சம்பவம்!
- போதை ‘வெறியில்’... மொத்த ‘குடும்பத்திற்கும்’ ஒரே ‘நாளில்’ நேர்ந்த பயங்கரம்... நெஞ்சை ‘உலுக்கும்’ சம்பவம்...
- 2 மாதங்களுக்கு முன் ‘காணாமல்’ போனவர்... ‘எலும்புக்கூடாக’ கிடைத்த கொடூரம்... ‘அதிர்ந்துபோய்’ நின்ற போலீசார்... ‘பரபரப்பு’ சம்பவம்...
- 'தாயை கொலை செய்து, தம்பியை தாக்கிவிட்டு'... அந்தமானுக்கு ஆண் நண்பருடன்... 'சுற்றுலா சென்ற பெண் சாஃப்ட்வேர் இன்ஜினியர்’... அதிரவைத்த சம்பவம்!
- வீட்டுக்குள் இருந்து வீசிய 'துர்நாற்றம்'... 'ராம்' பட பாணியில் வாசலில் அமர்ந்திருந்த 'மகன்'... 'வெலவெலத்துப்' போன 'போலீசார்'...
- 'வேலைக்கு போக சொல்லி திட்டுனா'... கர்ப்பிணி மனைவி என்றும் பாராமல், 'கணவர்' செய்த கொடூரம்... அதிர்ந்து போன 'திருச்சி' போலீஸ்!