"கூட்டமா எங்க போறீங்க?" ... பிரார்த்தனை செஞ்சு கொரோனாவ ஒழிக்க ... கும்பலாக கிளம்பிய கூட்டம்!
முகப்பு > செய்திகள் > தமிழகம்ஈரோடு மாவட்டம் பவானி பகுதியை சேர்ந்தவர் ராணி. அங்குள்ள பகுதி ஒன்றிலுள்ள பள்ளியில் தலைமையாசிரியாராக பணியாற்றி வரும் ராணி, ஜெபக்கூடம் ஒன்றை நடத்தி வருகிறார். இவரது கணவர் போலீசாக பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், உலகம் முழுவதும் பரவி வரும் கொரோனா வைரசை ஒழிக்க கூட்டு பிரார்த்தனை செய்வதற்காக டாடா ஏஸ் வண்டியில் படத்துக்கும் மேற்பட்ட ஆட்களை ஏற்றி பெரிய குறும்பாளையம் காலனிக்கு ராணி சென்றுள்ளார். சமூக விலகலை கடைபிடிக்காமல் டிரம்ஸ் மேளத்துடன் வண்டி வருவதைக் கண்ட காலனி மக்கள் உடனடியாக வண்டியை தடுத்து நிறுத்தி ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் போது இப்படி கூட்டமாக செல்லலாமா என கேட்டுள்ளனர். வண்டியில் இருந்தவர்கள் பிரார்த்தனை செய்யப் போவதாக சொன்ன நிலையில் ராணி எந்த பதிலும் சொல்லாமல் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார்.
இதனையடுத்து அந்த பகுதி மக்கள் ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். வண்டியில் வந்த அனைவரையும் போலீசார் பவானி காவல் நிலையம் அழைத்து சென்று விசாரித்தனர். விசாரணைக்கு பின் ராணி மற்றும் வண்டியின் டிரைவரை கைது செய்தனர்.
ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் கும்பலாக மக்களை வண்டியில் ஏற்றிக் கொண்டு பிரார்த்தனை என்ற பெயரில் எந்தவித விழிப்புணர்வும் இல்லாமல் இப்படி செயல்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'இரும்பு கம்பியால் வேலி'...'தண்ணீர், காய்கறி எல்லாம் ரெடி'... 'தனிமைப்படுத்தப்பட்ட '1800 குடும்பங்கள்'!
- டெல்லியில் இருந்து தென்னிந்தியா நோக்கி கொரோனா படையெடுத்தது எப்படி?... கொரோனாவின் தீவிரம் ஏன் ஈரோட்டில் அதிகமாக உள்ளது?... சிறப்பு தொகுப்பு!
- 'ஹலோ... நாங்க லண்டன்ல இருந்து கால் பண்றோம்!'... ஆன்லைன் மூலம் சம்பாதிக்க... ஆசை வார்த்தை காட்டிய ஈரோடு இன்ஜினியர்கள்!... கோடிக்கணக்கில் மோசடி... வேற லெவல் ஸ்கெட்ச்!
- ‘தமிழகத்தில்’ மேலும் ‘6 பேருக்கு’ கொரோனா... ‘எந்தெந்த’ மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு ‘பாதிப்பு?’... சுகாதாரத்துறை தகவல்...
- 'ஈரோட்டில்' வீடுகளில் முடக்கப்பட்ட '694 பேர்'... கைகளில் 'முத்திரை' குத்தப்பட்டிருக்கும் இவர்களை... வெளியில் 'பார்த்தால்' அரசுக்கு தெரிவிக்க அறிவுறுத்தல்...
- ‘நான் உங்களை நேசிக்கிறேன்’... ‘இறுதியாக’ விரும்பியதை ‘போனில்’ கேட்டு மகிழ்ந்ததும்... ‘10 நிமிடங்களில்’ பிரிந்த உயிர்... ‘கலங்கவைக்கும்’ சம்பவம்...
- 'பீகாருக்கு போய்ட்டு வந்து ஒரே சளி, இருமல்'... 'கவனிக்காமல் இருந்த மில் ஓனர்'... ஈரோட்டில் பரபரப்பு!
- 3 ‘தமிழக’ மாவட்டங்கள் உட்பட... நாடு முழுவதும் ‘75 மாவட்டங்கள்’... ‘மார்ச் 31’ வரை முற்றிலும் ‘முடக்கம்’...
- ‘இது கொரோனாவ விட கொடூரம்யா!’ .. ‘குடித்துவிட்டு நடுரோட்டில்.. போதைக்காரர்கள் செய்த அட்டூழியம்!’
- ‘நடுராத்திரி வீட்டுக்குள் கேட்ட சத்தம்’.. ‘திடீரென உருட்டுக்கட்டையால் விழுந்த அடி’.. விவசாய தம்பதிக்கு நடந்த கொடுமை..!