'பெற்றோருக்கு' எதிராக 'புகார்' கொடுத்த புது மாப்பிள்ளை'.. காரணத்தை கேட்டா அசந்துருவீங்க!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

வேலூர் மாவட்டம் திப்பசமுத்திரம் கிராமத்தை சேர்ந்த ரவி (35) என்பவருக்கும், பலவன்சாத்துக்குப்பம் (வேலூர்) பகுதியைச் சேர்ந்த ரோஜா பிரியா(20) என்பவருக்கும் நேற்று காலை வேலூர் செண்பாக்கம் செல்வ விநாயகர் கோயிலில் வைத்து திருமணம் நடைபெறுவதாக இருந்தது.ஆனால் ரவியின் பெற்றோர்கள் கடைசி நேரத்தில் மணமகள் மனநிலை சரியில்லாதவர் என திருமணத்தை நிறுத்தி விட்டனர். மணமேடை வந்த திருமணம் கடைசி நேரத்தில் நின்றுபோனது.

மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் பரவாயில்லை, நான் இந்த பெண்ணை திருமணம் செய்துகொள்கிறேன் என ரவி எவ்வளவோ எடுத்துக்கூறியும் அவரது பெற்றோர் சம்மதிக்கவில்லை.இதனால் ஆத்திரமடைந்த ரவி அருகில் இருந்த வேலூர் வடக்கு காவல் நிலையத்துக்குச் சென்று தன்னுடைய குடும்பத்தினர் மீது புகார் அளித்தார். மேலும் தனக்கும் ரோஜா பிரியாவுக்கும் திருமணத்தை நடத்திவைக்குமாறு  காவல் துறையினரிடமும்  முறையிட்டார்.

இதைத்தொடர்ந்து இரு தரப்பினரையும் அழைத்துப் பேசிய போலீஸார், ''ரவியின் திருமணத்தைத் தடுக்க யாருக்கும் உரிமையில்லை. விருப்பமில்லாதவர்கள் திருமணத்தில் கலந்துகொள்ளத் தேவையில்லை. பிரச்னை செய்தால் கைது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்று ரவியின் குடும்பத்தாரை எச்சரித்து அனுப்பினர். பிறகு, ரோஜா பிரியாவுடன் பதிவுத் திருமணம் செய்துகொள்ளுமாறு ரவியிடம் போலீஸார் அறிவுறுத்தினர்.

தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகளை ரவி தன்னந்தனியாக செய்து வருகிறார். மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணாக இருந்தாலும் அவரைத் திருமணம் செய்து கொள்வதற்காக, குடும்பத்தையே எதிர்த்த மணமகன் ரவிக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

POLICE, MARRIAGE, VELLORE

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்