'கத்தி'யால் தாக்கிய வாலிபர் ... அசராமல் பதிலடி கொடுத்த 'பள்ளி மாணவி' ... 'பெண்' போலீசுக்கு குவியும் பாராட்டு !

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

கத்தியால் தனது கழுத்தை அறுத்த வாலிபரை, பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் கற்றுக் கொடுத்த தற்காப்புக் கலையை பயன்படுத்தி பள்ளி மாணவி ஒருவர் உயிர் தப்பியுள்ளார்.

சென்னை அமைந்தகரை பகுதியை சேர்ந்த 13 வயதான எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவருக்கு அதே பகுதியை சேர்ந்த நித்யானந்தம் (26) என்ற வாலிபர் காதல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நான்காம் தேதி பள்ளியில் இருந்து அந்த மாணவி வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருக்கையில் அங்கு வந்த நித்யானந்தம் அந்த மாணவியை நிறுத்தி தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தியுள்ளார். இதனை மறுத்து நடந்து சென்ற அந்த மாணவியின் கழுத்தை தான் மறைத்து வைத்திருந்த கத்தி மூலம் அறுத்துள்ளார்.

இதனை உணர்ந்த மாணவி தற்காப்பு கலை மூலம் தன்னை காத்துக் கொண்டார். நித்யானந்தமும் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இந்த சம்பவம் தொடர்பாக அந்த மாணவியின் பெற்றோர் அளித்த புகாரில் அண்ணா நகர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் எம்.தனலட்சுமி வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியதன் பேரில் 'போக்சோ' சட்டத்தின் கீழ் நித்யானந்தம் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்ஸ்பெக்டர் தனலட்சுமி தனது ஓய்வு நேரத்தில் அண்ணா நகர் பகுதியிலுள்ள பள்ளிகளில் சென்று அங்குள்ள மாணவ மாணவிகளுக்கு தற்காப்புக் கலை குறித்த பயிற்சி மற்றும் விழிப்புணர்வு வகுப்புகள் நடத்தி வருகிறார். அவர் அளித்த பயிற்சியின் மூலம் தான் அந்த மாணவி தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டது தெரிய வந்தது.

இதனையறிந்த போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் அந்த மாணவியை அழைத்து பாராட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

INSPECTOR, MARTIAL ARTS, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்