சென்னை வீட்டு உரிமையாளர்களே.. வாடகை என்ற பெயரில் மோசடி செய்ய காத்திருக்கும் கும்பல்.. தெரிய வந்துள்ள உண்மை

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னை: வீடு வாடகைக்கு விடும் ஹவுஸ் ஒனர்களும் இனி உஷாராக இருக்க வேண்டிய நிலை வந்துள்ளது.

Advertising
>
Advertising

பொதுவாக வேறு மொழி பேசும் மோசடி கும்பல் பல செல்போன் மூலம் வங்கியிலிருந்து பேசுகிறோம் என கூறி வங்கி கணக்கு எண்களையும், பாஸ்வேர்டு, ஓடிபி என வாங்கி வங்கி கணக்கில் மோசடி செய்வது வழக்கம்.

நூதன மோசடி:

ஆனால் நாட்கள் செல்ல செல்ல இப்போது இந்த கும்பல் சென்னையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு ஆப்பு வைக்கும் அளவிற்கு சென்றுள்ளது. ஏனென்றால் வீடு வாடகைக்கு விடும் ஒனர்கள் எல்லாம் 99acres, nobroker, magicbricks போன்ற house rental portal-லில் பதிவிடுகின்றனர். இதனை பயன்படுத்தி கொள்ளும் இந்த கும்பல் அந்த ஆப்பில் போடப்பட்டிருக்கும் போன் நம்பருக்கு கால் செய்து பேசி மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

நம்ப வைக்கும் விதமான அணுகுமுறை:

அவர்கள் பேசும் போது தாங்கள் Army cadet என்றும், transfer ஆகியுள்ளதாகவும் உடனே வீடு வாடகைக்கு வேண்டும் என்றும், வீடு photos சூப்பர், பார்க்க கூட வேண்டாம், அடுத்த வாரமே குடும்பத்துடன் வந்து பால் காய்த்துவிட்டு குடிவருவதாகவும் பேசுவார்களாம். அதோடு, சம்மந்தப்பட்ட நபர்கள் தங்களின் details whatsapp-ல் அனுப்புகிறேன் என்று PAN Card, ஆதார் கார்டு, license ன்னு மொத்த details உடனே அனுப்பி வீட்டு ஓனர்களை நம்ப வைத்து விடுகின்றனர்.

மொத்த வங்கிக் கணக்கும் காலி ஆகிவிடும்:

அதோடு, மோசடி கும்பலை சேர்ந்த நபர்களும் Advance உடனே gpay-ல் அனுப்பறேன், செக் பண்ணுங்க என்று  சொல்லி ஒரு ரூ.5 அனுப்பிட்டு, எனக்கு நீங்க confirm பண்ண அந்த link click பண்ணி ரூ.5 திருப்பி அனுப்புங்கன்னு கேட்கிறார்களாம். அதை நம்பி அந்த லிங்க் கிளிக் பண்ணியவர்கள் தான் இப்போது வம்பில் மாட்டியுள்ளனர். ஏனென்றால் இந்த லிங்கை கிளிக் செய்தால் சம்மந்தப்பட்டவரின் மொத்த வங்கிக் கணக்கும் காலி ஆகிவிடும். இந்த சம்பவம் குறித்து கூறும் ஒரு ஹவுஸ் ஓனர், 'இந்த மாதிரியான பிராடு கும்பல் எங்களுக்கும் கால் செய்திருக்கிறது. அதேபோல எங்க apartments-லையே ஒரு 5 பேருக்கு இந்த மாதிரி கால் வந்திருக்கு.

எத்தனை பேர் வேலை செய்கிறார்கள்?

அதே army officer, அதே ID cards, அதே அவசரம், அதே transfer from Delhi, அதே next week பால், அதே take this 5 rs.. கவனம் மக்களே, இந்த கும்பல் கொஞ்சம் அசந்தாலும் மொத்த account-யும்  வழித்து எடுத்திட்டு போய் விடுவார்கள்.. நம்ம வங்கி கணக்கை காலி பண்ண எத்தனை பேரு வேலை செஞ்சிட்டு இருக்கிறார்கள்' என தன் குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

HOME OWNERS, FRAUD, CHENNAI

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்