‘ஓடும் பஸ்ஸில் ப்ளான் போட்டு திருடிய கும்பல்’.. மிரள வைத்த நூதன கொள்ளை சம்பவம்..!
முகப்பு > செய்திகள் > தமிழகம்பேருந்தில் சில்லரையை சுண்டுவிட்டி நூதன திருட்டில் ஈடுபட்டு வந்த கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவை மாவட்டம் உக்கடம் பகுதியைச் சேர்ந்த அபினவ் என்பவர் நகைப்பட்டறை ஒன்றை நடத்தி வருகிறார். இவர் கடந்த ஜூன் மாதம் தன்னிடம் வேலை பார்க்கும் 60 வயதான ரவிச்சந்திரன் என்பவரிடம் சேலத்தில் உள்ள நகைக்கடைகளுக்கு வழங்குமாறு நகைகளை கொடுத்து அனுப்பியுள்ளார். அவர் அங்குள்ள நகைக்கடைகளுக்கு கொடுத்துவிட்டதுபோக மீதமிருந்த நகையுடன் தனியார் பேருந்தில் பயணித்துள்ளார். பீளமேடு அருகே பேருந்து வந்த போது பையில் நகை இல்லாததைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனை அடுத்து உடனே இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதனால் பேருந்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா கட்சிகளை போலிசார் ஆய்வு செய்துள்ளனர். அப்போது நூதன முறையில் ஒரு கும்பல் நகைகளை கொள்ளை அடித்தது தெரியவந்துள்ளது. அதில் 5 பேர் கொண்ட கும்பல் நகை வைத்திருந்த பெரியவரின் அருகிலும், பின் இருக்கையிலும் அமர்ந்துள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் நாணயத்தை சுண்டி விடுகிறார். உடனே நாணயத்தை தேடுவதுபோல நகையை கொள்ளயடித்து சென்றுள்ளனர்.
இதனை அடுத்து சிசிடிவி காட்சிகளில் அடிப்படையில் மலைச்சாமி, வீரபாண்டி, சீனிவாச பாண்டியன் ஆகிய மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இதில் மலைச்சாமி என்பவர் மீது பல்வேறு மாவட்டங்களில் 25 -க்கும் மேற்பட்ட வழக்குகள் இருப்பது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது. மற்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- 'என்ன காப்பாத்து ஹரி'...'ரத்தத்தால் எழுதப்பட்ட வார்த்தைகள்'...'என் மனைவி' எங்க?...அதிரவைக்கும் சம்பவம்!
- ‘கண் இமைக்கும் நேரத்தில் இடிந்து விழுந்த பாலம்’.. ‘நூலிழையில் உயிர்தப்பிய நபர்’ உறைய வைத்த சிசிடிவி காட்சி..!
- 'தள்ளி நில்லுயா.. ஒட்டிக்கும்'.. 'நாளைக்கு சாவப் போறவனலாம்'.. 'விஜய்' பட இயக்குநர் வேதனை!
- 'யுனிஃபார்ம்ல செய்ற காரியமா இது?'.. சர்ச்சையில் சிக்கிய போலீஸ்.. வைரலாகும் திருமண ஆல்பம் ஷூட்.. வீடியோ!
- 'வெளிய வரட்டும்.. பாத்துக்கலாம்'.. போலீஸ் தேர்வை எழுதிய திருடனுக்கு நடந்த சம்பவம்!
- பட்டப்பகலில் முகத்தில் கர்ஷிப் கட்டிக்கொண்டு இளைஞர் செய்த செயல்..! அதிர்ச்சியை ஏற்படுத்திய சம்பவம்..!
- '15 வருஷமா கோவிலே கதி'.. 'இறந்த பிச்சைக்காரரிடம் இருந்த பணம்'.. 'இவ்வளவா?'.. விழிபிதுங்கிய போலீஸார்!
- ‘சென்னையிலிருந்து வெளியூர் செல்பவர்களுக்கான’.. ‘தீபாவளி சிறப்பு பேருந்துகள்’.. ‘டிக்கெட் முன்பதிவு தொடக்கம்’..
- ‘குழந்தையை வைத்து ஓடும் பேருந்தில்’... 'பெண்கள் செய்த அதிர்ச்சி காரியம்'!
- 'உடைக்கப்பட்ட சிலை'.. 'திகுதிகுவென எரிந்த கார்'.. கலவர பூமியான வேதாரண்யம்.. குவிந்த பாதுகாப்பு படை!