‘திடீரென உருவான பெரிய பள்ளம்’... ‘அதிர்ச்சியில் உறைந்த வாகன ஓட்டிகள்’... 'சென்னையில் பரபரப்பு'!

முகப்பு > செய்திகள் > தமிழகம்
By |

சென்னையில் 15 அடி ஆழத்துக்கு திடீர் பள்ளம் ஏற்பட்டதால், குடியிருப்புவாசிகள் மற்றும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் உறைந்தனர்.

சென்னை அண்ணாநகரில் சாந்தி காலனியில் 4-வது அவென்யூ சாலை உள்ளது. இங்கு இன்று காலை அனைவரும் பள்ளிகளுக்கும், பணிகளுக்கும் பரபரப்பாக சென்று கொண்டிருந்தனர். அப்போது அந்த சாலையில் 15 அடிக்கு திடீர் பள்ளம் உருவானது. இதனால் அச்சமடைந்த வாகன ஓட்டிகள் சாலைகளில் அப்படியே நின்று விட்டனர். இரு சக்கர வாகனம், கார், ஆட்டோ,  பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் வரிசைகட்டி நின்றதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதுதொடர்பாக உடனடியாக மாநகராட்சி மற்றும் போக்குவரத்து காவல்துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் வாகனங்களை மாற்று பாதையில் திருப்பி விட்டனர். ராட்சத பள்ளம் ஏற்பட்ட இடத்தைச் சுற்றி இரும்புத் தடுப்புகளை வைத்து, விபத்து ஏற்படாத வண்ணம் நடவடிக்கை மேற்கொண்டனர். கழிவுநீர் கால்வாயால், அங்கு பள்ளம் ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு உடனடியாக மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கு சென்ற அவர்கள், பள்ளத்தில் இருந்த கழிவுநீரை வெளியேற்றினர். பள்ளத்தை மூடும் பணியில் அவர்கள் ஈடுபட்டனர்.  மேலும் இந்த பள்ளம் மெட்ரோ ரயில் பணிகளால் ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. இது போல் அண்ணாசாலை உள்ளிட்ட இடங்களில், திடீர் பள்ளங்கள் ஏற்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

CHENNAI, ANNANAGAR

மற்ற செய்திகள்

தொடர்புடைய செய்திகள்