'பூசாரி அங்கிள் என்கிட்ட தப்பா நடந்துக்கிட்டார்...' 'அன்பாக பேசி தனியே அழைத்து சென்று...' பதற வைக்கும் சிறுமியின் வாக்குமூலம்...!
முகப்பு > செய்திகள் > தமிழகம்10 வயது சிறுமியிடம் பாலியல் தொந்தரவு செய்ய முயன்ற 59 வயதுப் பூசாரியை குறித்து போலீசாரிடம் கூறிய சிறுமியின் வாக்குமூலத்தை அடுத்து முதியவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த 10 வயதுச் சிறுமி, அழுதுகொண்டிருந்ததை பார்த்த சிறுமியின் அம்மா காரணம் கேட்டதற்கு அவர் கூறிய பதில் அனைவருக்கும் அதிர்ச்சியளிக்கும் வகையில் இருந்தது. உடனடியாக தன் குழந்தையைக் கூட்டிக்கொண்டு மடிப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.
10 வயது சிறுமி இன்ஸ்பெக்டர் முத்துகாமாட்சியிடம் நடந்த விஷயத்தை கூறியுள்ளார். அதாவது, சிவன் கோயிலில் பூசாரியாக இருக்கும் சிவக்குமார் (59) அங்கிள், தன்னிடம் தவறாக நடக்க முயன்றதாகக் கூறியுள்ளார்.
மேலும் சிறுமியின் அம்மா கொடுத்த புகாரின்பேரிலும், சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சிவக்குமாரிடம் போலீசார் விசாரித்தனர். அப்போது அவர் தான் செய்த குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். இதனால் சிவக்குமார் மீது போக்ஸோ வழக்கு பதிவு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார் சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மடிப்பாக்கம் அனைத்து மகளிர் போலீஸார் தரப்பில் கூறுகையில், 'சென்னை உள்ளகரத்தில் வசிக்கும் சிவக்குமார் என்பவர் சிவன் கோயிலில் பூசாரியாக உள்ளார். கடந்த 18-ம் தேதி மாலை சிவக்குமார், பாதிக்கப்பட்ட சிறுமியைத் அன்பாகப் பேசி தனியாக அழைத்துச் சென்றுள்ளார். பின்னர் சிறுமியிடம் தவறாக நடக்க முயற்சி செய்துள்ளார்.
இதனால் என்ன செய்வதென்று அறியாத சிறுமி அங்கிருந்து வீட்டுக்கு வந்து விவரத்தைக் கூறியதின் பெயரில் சிறுமியின் அம்மா அளித்த புகார் அளித்தார். பின் உடனடியாக சிவக்குமாரை கைது செய்து தற்போது விசாரித்து வருகிறோம்" என்றனர்.
மற்ற செய்திகள்
தொடர்புடைய செய்திகள்
- '4 வயசு சிறுமிக்கு முன்ன வச்சு...' 'அப்பா, அம்மா ரெண்டு பேரையும் துடிதுடிக்க...' ' உறைந்து நின்ற குழந்தை கடைசியில்...' குலைநடுங்க செய்யும் கொடூர சம்பவம்...!
- 'தொப்புள் வழியா மலம் போகுது...' 'ஒரு குழந்தை பிறந்து கொஞ்சம் நாள்லையே இறந்துடுச்சு...' உதவிக்கரம் நீட்டிய மாவட்ட ஆட்சியர்...!
- 'சிரிச்சு முடியல சாமி!'.. ஊரடங்கு சமயத்தில்... காவல்துறையினரை வீட்டுக்கே அழைத்து வந்து... பெற்றோரை அலறவிட்ட சுட்டி!.. என்ன நடந்தது?
- 'மனிதர்களை கொன்ற கொரோனாவால்... மனிதத்தை கொல்ல முடியவில்லை!'... 7 வயது சிறுவன் முதல் 82 வயது மூதாட்டி வரை... கொரோனா தடுப்பு பணிகளுக்கு... அள்ளி வழங்கும் நெஞ்சங்கள்!
- 'கரு கலைஞ்சு போச்சு'... 'கையிலிருந்த கைக்குழந்தை'... சென்னையை உறையவைத்த அதிர்ச்சி சம்பவம்!
- ‘சமையல்காரங்க ஹெட்போன் மாட்டிருந்தாங்க!’.. பள்ளி மதிய உணவு பாத்திரத்தில்.. விழுந்து 3 வயது குழந்தை பலி!.. கதறிய தந்தை!
- 'ஜாம்பவானைத் தோற்கடித்த சென்னை மாணவன்!'... 'செஸ் போட்டியில் அசத்தல்!'...
- டிப்-டாப்பாக வந்த நபர்... பைக்கில் ஏற அடம்பிடித்த 2 வயது குழந்தை... பெற்றோர் கண்முன்னே நொடியில் நடந்த சோகம்!
- 'நீ கவலை படாத பா'...'நான் வளர்ந்து அவனுங்கள'...'சீரியஸ் ஆன சுட்டி பையன்'...அனல் தெறிக்கும் வீடியோ!
- ‘நான்கு வயது குழந்தைக்கு நேர்ந்த கொடூரம்’... ‘தாயின் 2-வது கணவரின் அதிர்ச்சி வாக்குமூலம்’... 'சென்னையில் நெஞ்சை உலுக்கும் சம்பவம்’!